#குஜராத்தில் 26ஆவது ஆண்டாக #பாஜக #ஆட்சி!

குஜராத்திகள் அன்பானவர்கள்.

நான் மூன்று ஆண்டுகள் குஜராத் முழுவதும் நூலக ஆய்வுப் பயணம் மேற்கொண்டு
எல்லா ஊர் மக்களிடமும் பழகி இருக்கிறேன்.
எந்த விற்பனை கடைகளிலும் தண்ணீர் தவறாமல் கொடுப்பார்கள்.
இனிப்பு அதிகம் எடுப்பார்கள்.

குஜராத்தி மக்கள் அரசியல் பேசுவதில்லை..

பொது விவாதங்கள் எதையும் கண்டு கொள்வதில்லை…

வீடும் வணிகமும் ஒரே இடத்தில் வைத்து கொள்பவர்கள்…

அவர்களின் தேவைகள் பெரிதாக இருப்பதில்லை..
செலவு செய்யாத சிக்கனம்..

கொத்தடிமையான குடும்ப வாழ்க்கை
சிறு வயதில் திருமணம்…..

காசு ஒன்றே குறி….
வட்டி என்பதே குறிக்கோள்…..

பாரத் மாதாகீ ஜே.. போடும் பலரும்
மார்வாடிகளிடம் எதுவும் சொல்ல முடியாது…

தேசபக்தி தெய்வ பக்தி என்பதெல்லாம்
இவர்களுக்கு காசு பக்திதான்….

இவர்கள்பொது வெளியில்
புரட்சி புடலங்காய் எதுவும் செய்வதில்லை…..

காந்தி யை மற்ற மாநிலக்காரன் கொண்டாடுவதைப் போல
அவர்கள் எவனும் கொண்டாடுவதில்லை…

நர்மதை ஆற்றங்கரையில், காந்தி ஆஸ்ரமம் அங்குதான்
என்றாலும்
அவர்கள் பட்டேலையே விரும்புகிறார்கள்….

உயர்சாதி பூர்ஸ்வா எண்ணம் கொண்டஇவர்கள்
கல்வி வேலை என்பதாக பேசுவது இல்லை….

பதினைந்து வயதில் பால்யமணம் செய்து
வட்டித் தொழிலுக்கு வந்து விடுகிறார்கள்….

வெள்ளையன் காலத்தில் வெளிநாட்டு வர்த்தகம்
போய் காசை சேர்த்தவர்கள்…

ஜெயின் ராம்சந்த் என்கிற பெயர்களில்
எல்லா ஊர்களிலும் வட்டிக்கடை வைத்திருக்கும்
வசதி தெரிந்தவர்கள்….

படித்தவர்கள்.. இல்லாத இடங்களில் எல்லாம்
இவர்களின் கடைகள் இருக்கிறது.

மனித உழைப்பு அறியாத மேனி
கருக்காத தோலும் நான்கு சுவர்களுக்குள் முடங்கி
இவர்களின் வாழ்க்கை முடிந்து விடுகிறது.

இந்திய ராணுவத்தில் இல்லாத ஒரே ரெஜிமெண்ட்
குஜராத்தி ரெஜிமெண்ட்தான்.

ஒருவர்கூட இராணுவ த்தில் சேர்வதில்லையாம்.
இது எனக்கு உறுதியாக தெரியாது.

எந்த யுத்தம் வந்தாலும் இவர்களுக்கு
எந்தக் கவலையும் இருப்பதில்லை.
பிணங்களும். விழுவதில்லை.

ஊருக்கு தேச பக்தி பேசுவார்கள்.

வட்டி வங்கிப் பணம் வாய்ச்சவடால் என்பதோடு
இவர்களின் வாழ்க்கை பயணிக்கிறது.

அதானி அம்பானி நீரவ் என்பதாக
ஒரு பட்டியல் இருக்கிறது.

அது ஒட்டு மொத்த இந்திய பொருளாதாரத்தை
ஒரு மாநிலத்தில் அடக்குவது.

அதற்கு பயன்படும் நபர்களை இவர்கள்
அரியணை ஏற்றுகிறார்கள்.

காசு பணம் துட்டு என்பது
இவர்களின் வாழ்க்கை.

உடல் உழைப்பு இல்லாத
ஒரே மாநில மக்கள் குஜராத்திகள்.
அதை இழப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை.

அதற்கு தோதானவர்கள் யாரோ
அவர்களை
மீண்டும். மீண்டும் தேர்வு செய்து இருக்கிறார்கள்.

வியாபாரிகள் வியாபாரம் செய்கிறார்கள்.

அரசியல் என்பது அங்கு
மக்களுக்கான மாற்றம் அல்ல.

மார்வாடிகளின் வெற்றி அது!

–வாட்ஸப் பகிர்வு.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.