அஜித் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துபாயில் தொடங்கவுள்ளதால், தற்போது சில நாட்கள் பிரேக் விடப்பட்டுள்ளதாம். மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரிப்பில் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகிறது விடாமுயற்சி.
இத்தோடு அஜித்தின் 63வது படம் குறித்தும் செய்திகள் வருகின்றன. அஜீத்தின் ஏகே 63 படத்தை மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவிருந்தார். இவரது மார்க் ஆண்டனியில் விஷால், எஸ்ஜே சூர்யா நடித்திருந்தனர். படம் 100 கோடி வசூலித்தது. வெற்றிப் படம்.
ஆனாலும் தற்போது ஏ கே 63 படத்தை தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்குவார் என்று தெரிகிறது. முதலில் விக்னேஷ் சிவன், பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் என்று பெயர்கள் மாறி தற்போது கோபிசந்த் லிஸ்ட்டில் இருக்கிறார்.
படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாந்த். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா.