’கிளியார் பதில்கள்; ‘கடல்’ படத்துக்கு தடை விதிக்கச்சொல்லி திடீரென்று பாதிரியார்கள் வீதிக்கு வந்திருக்கிறார்களே?’- ராம் மோகன், திருச்செந்தூர்.
கிளியார்: அவர்கள் திடீரென்று விபரம் தெரியாமல் வீதிக்கு வந்திருப்பது, படம் பார்த்தவர்கள் மத்தியில் பீதியையும், பார்க்காதவர்களுக்கு பேதியையும் உண்டாக்கியிருக்கிறது. ’கடல்’ ரிலீஸான தியேட்டர்களில் கடலை மிட்டாய் யாவாரம் கூட நடக்கவில்லை. அத்தனை ஆபரேட்டர்களுமே மணிரத்னத்துக்கு போன் பண்ணி தியேட்டர் நாறிடப்போகுது ‘உடலை சீக்கிரம் எடுத்துட்டுப்போங்கன்னும் சொல்லியாச்சி.
பாடி உழுந்து ரெண்டு நாளாச்சி. சொந்தக்காரங்களுக்கெல்லாம் சொல்லி அனுப்பியாச்சி. காலை ஒடித்து இனி அடக்கம் பண்ணவேண்டியது மட்டும்தான் பாக்கிங்கிறப்போ, சைலண்டா ஒரு பிடி மண்ணைப்போட்டுட்டு போறதை விட்டுட்டு போராட்டம் நடத்துறது கண்டு பொங்குது மனசு. கர்த்தரே இவர்களுக்கு நல்ல புத்தியைத்தாரும்.
[கிளிப்பயபுள்ளய எங்கடா கொஞ்ச நாளா காணோமுன்னு தேடுறவங்களுக்கு மட்டும் இந்த தகவல். பயபுள்ள’ சின்னச்சின்ன ஆசை, சிறகொடிக்க ஆசை பாடிக்கிட்டு, வீஸிங் ப்ராப்ளத்துனால பெட்ரெஸ்ட்ல இருக்கு. எந்த நிமிஷமும் எழுந்திருச்சி வரலாம்]