பொன்முட்டையிடும் வாத்து சிக்கினால், அதை அறுத்து குழம்பு வைத்து, லெஃப்ட், ரைட்டு லெக் பீஸ்களை ஃப்ரை பண்ணி குறையின்றி அதை தின்று தீர்ப்பதுதான் நம் தமிழர்களின், குறிப்பாக சினிமாத்தமிழர்களின் மரபு.
அப்படி சிலரால் அறுக்கப்பட்டு, குற்றுயிரும் குலையுயிருமாய் தப்பிப்பிழைத்த சானல் ஜீ தமிழ் தொலைக்காட்சி, தற்போது’ஒரு தாயின் சபதம்’ ‘சொல்வதெல்லாம் உண்மை’ போன்ற சில கவனம் கவரும் நிகழ்ச்சிகளால் தனி நடை போட ஆரம்பித்திருக்கிறது.
இந்த வரிசையில் இடம்பிடிக்க, இன்று இரவு எட்டுமணிக்கு ‘ஸ்டுடியோ6’ கூலா கொஞ்சம் சினிமா’ என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.
அடிக்கடி கரண்ட் கட் ஆகும் தமிழகத்தை தனது வயர்க்கரங்களால் அள்ளி அணைக்க வந்த பவர்ஸ்டார் ‘எந்தக்கடையில விக்’கு வாங்குறார்? என்பதில் துவங்கி, லக்கிஸ்டார் லந்துகுமார், அவர் படத்தைப் பார்த்து அவரே ஏன் தூங்குறார்?’ என்பது வரை விலாவாரியாக, ஒவ்வொரு ஞாயிறும் அலசப்போகும் நிகழ்ச்சியாம் இந்த ’ஸ்டுடியோ6’. இதை இயக்குபவர் ஸ்ரீனிவாஸ்.
ரேடியோ எஃப்.எம்.ல் இம்சை அரசி என்ற பெயரில் நித்தமும் ’நான்ஸ்டாப் நான்சென்ஸாக ’நானூறு கி.மி. ஸ்பீடில் பேசி, உசுரை வாங்குவார்களே ஒஃபீலியா என்ற ஒரு அம்மணி, அவர்தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவிருக்கிறார். நிகழ்ச்சியின் இன்னொரு ஹைலைட் ‘கடல்’ துளசியை விட ரகசியமாக வளர்க்கப்பட்ட ஒஃபீலியாவின் தங்கை[twinsister] மாயாவும் முதல்முறையாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கடலைபோட இருப்பது.
‘ஸ்டுடியோ6’ நிகழ்ச்சிய தீவிரமா ரசிக்க இருக்குற ரசிகர் ஒருவரை, அதைவிட தீவிரமா காதலிச்சி கைப்பிடிக்கிறதுதான் அந்த மாயாவோட மைண்ட் வாய்சாம்.
அந்த ‘மாயவலைல விழனும்னு நினைச்சா, எட்டு எட்டா மனுசன் வாழ்வைப் பிரிச்சிக்கோ, இன்னைக்கு எட்டு மணிக்கு ‘ஸ்டுடியோ6’ஐ ரசிச்சி go,..