கே.பாலசந்தர் அவர்களின் பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் 1983ம் ஆண்டு அறிமுகமானவர் நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகராகவும் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அதிகம் படித்தவராக அரசு வேலை கிடைத்த போதிலும் நடிகனாக தான் ஆவேன் என கோவில்பட்டியில் இருந்து சென்னை வந்து நடிகரானவர் நடிகர் சார்லி.
விஜய், அஜித் படங்களில் அதிகம் நடித்துள்ள இவர் சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடிக்கிறார். தற்போது அருமைப்பட்டி சக்திவேல், ஃபைண்டர் ப்ராஜெக்ட் 1, ரூபன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
அண்மையில் நடிகர் சார்லியின் மகன் அஜய்தங்கசாமிக்கும் பெர்மிசியாடெமிக்கும் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களின் திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் திரைப்பிரங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.