சமீபத்தில் நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் பாஜகவின் NDA உடன் கூட்டு சேர்ந்து வெற்றி பெற்று துணை முதல்வர் ஆனார்.
ஆனால் அதே மெகா குடும்பத்தை சேர்ந்த அல்லு அர்ஜுனோ ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஷில்பா ரவி ரெட்டிக்கு ஆதரவு தெரிவித்தார்.
அல்லு அர்ஜுன் ஷில்பாவுக்கு ஆதரவாக நின்றதை பார்த்தவர்கள் மெகா குடும்பத்தில் பிரச்சனை போன்று என பேசத் துவங்கினார்கள். தன் சொந்தக்காரரை விட்டுவிட்டு அல்லு அர்ஜுன் ஏன் இப்படி செய்தார் என பரவலாக பேச்சு அடிபட்டது.
இந்நிலையில் இது குறித்து பேசியிருக்கிறார் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகளும், நடிகையுமான நிஹாரிகா கொனிடெலா.அல்லு அர்ஜுன் பற்றி நிஹாரிகா கூறியதாவது,
அது பற்றி நாங்கள் வீட்டில் அரசியல் பேசியது இல்லை. எல்லோருக்கும் ஒரு காரணம் இருக்கும். அரசியல், மதம் தொடர்பாக அவரவருக்கு ஒரு விருப்பம் இருக்கும் என்றார்.
அல்லு அர்ஜுனை அவரின் சகோதரரான நடிகர் சாய் தரம் தேஜ் எக்ஸ் தளத்தில் பின்பற்றுவதை நிறுத்திவிட்டார். இது ஏன் என்று நிஹாரிகாவிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் கூறியதாவது, நீங்கள் சொல்லித் தான் எனக்கே தெரியும். இதுவரை இதை நான் கவனிக்கவில்லை. நீங்கள் சொன்னது போன்று எக்ஸ் தளத்தில் அல்லு அர்ஜுனை பின் தொடர்வதை சாய் தரம் தேஜ் நிறுத்தியிருந்தால் அதற்கு காரணம் இருக்கும் என நினைக்கிறேன் என்றார்.
தேர்தலில் பவன் கல்யாண் வெற்றி பெற்றதை கொண்டாட மெகா குடும்பத்தார்கள் ஒன்று சேர்ந்தார்கள். அந்த கொண்டாட்டத்தில் அல்லு அர்ஜுன் கலந்து கொள்ளவில்லை.
மெகா குடும்பம் சங்கித் தனமாக யோசிக்கும்போது, அல்லு அர்ஜூன் தெளிவாக யோசிப்பது போல் தெரிகிறது.