மகாபாரதத்தில் திரௌபதி துகிலுரியப்பட்டதில் துவங்கி டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி வரை எல்லா காலங்களிலும் பெண்கள் மீதான வன்முறை என்பது தொடர்ந்து வந்தேயிருக்கிறது.
படிக்கிற கல்விக்கூடங்கள் முதல் காவல்கூடங்கள் வரை பெண்கள் சிதைக்கப்படுவதை காட்டமாக சித்தரிக்கும் படம் தான் எனது “ஊடுருவல்”என்கிறார் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிக்
கொண்டிருக்கும் த.செந்தூரன்.
படத்தின் நாயகி திரிபுரா (சுந்தரியா ?) என்னும் புதுமுகம். திரிபுராவிலிருந்து வந்தவரோ என்று எண்ணவைக்கும் தோற்றம் கொண்ட இவருக்கு தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகள் தெரியுமாம்.
இது இவருக்கு எட்டாவது படமாம். தமிழில் முதல் படமாம். இவரோடு இன்னும் இரண்டு பெண்களும் வருகிறார்கள். ஏதோ ஆங்கிலப் பட த்ரில்லரின் வாசம் அடிக்கிறது. பார்ப்போம்.
இப்படத்தின் நாயகன் பெயர் கோவிந்த். இவருக்கு இது இரண்டாவது படம். ஈழத் தமிழரான சாய் தர்ஷன் இசையமைத்திருக்கிறார். இதற்கு முன்பு ஆல்பங்கள் பலவற்றை வெளியிட்டிருக்கிறார். இவருக்கு இது முதல் படம். அந்தமான், பாண்டிச்சேரி, மூணாறு போன்ற இடங்களில் இதுவரை படப்பிடிப்பு நடந்துள்ளது.
இப்படத்தில் ஊடுருவியிருக்கும் ஒரு பவர்புல் ஸ்டார் நம்ம பவர் ஸ்டார். இவர் எப்படி இந்த லேடீஸ் கேங்குலன்னு தலையைச் சொறியாதீங்க. ஜேம்ஸ்பாண்ட் படங்கள்ல அவரைச் சுத்தி எப்பவும் நாலு கேர்ள்ஸ் ரொமாண்டிக்கா சுத்தறமாதிரி ஏதாவது பவர்புல் கெட்டப் இருக்கும். நம்புங்க பாஸ்.
படம் என்னவோ வித்தியாசமாய்த் தான் தெரிகிறது. ஆனா ஸ்டில்ஸைப் பார்த்தால் வேறு மாதிரி தெரிகிறது. கேலரியை போடுறோம். இது எப்படியான படம்னு நீங்களே ஸ்டில்ஸ் பார்த்து முடிவு பண்ணிக்குங்க.