பவர் ஸ்டார் ஏற்கனவே ஒரு முறை 10 லட்ச ரூபாய் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அது அவரது சினிமா இமேஜைக் குறைக்கும், அவரது மார்க்கெட் அவுட்டாகும் என எல்லோரும் எதிர்பார்த்ததற்கு மாறாக அவருடைய இமேஜ் இன்னும் எகிறியது.
கண்ணா லட்டு திங்க ஆசையா முதல், டிஎம்டி கம்பி விளம்பரம் வரை அசத்தி ஒரு ரவுண்டு வந்து விட்டார். இப்போது அவரது இமேஜை அடுத்த லெவலுக்கு உயர்த்த வந்திருக்கிறது இந்த பண மேட்டர். இப்போது வந்திருப்பது 420 கேஸ்.
நேற்று காலை பவரின் பவர் தெரியாத தமிழக காவல்துறை அவரை சாலிக்கிராமத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துவிட்டார்கள். காரணம் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு ஓட்டல் அதிபருக்கு 20 கோடி கடன் வாங்கித் தருகிறேன் அதற்கு எனக்கு கமிஷன் 50 லட்சம் என்று பேசி ஐம்பது லட்சத்தையும் கறாராகக் கறந்து விட்டு, கடனை வாங்கிக் கொடுக்காமலே பல மாதங்கள் டபாய்த்துவிட்டிருக்கிறார்.
கடைசியில் கமிஷன் பணமும் திரும்பி வராததால் வெறுப்பான அந்த ஓட்டல் அதிபர் ரங்கநாதகாரு போலீஸில் கம்ப்ளெய்ன்ட் செய்ய, போலீஸ் பவரிடம் ‘கண்ணா களி திங்க ஆசையா’ என்று கேட்க, இப்போது புழலில் பவரின் வரவால் பவர் கட்டே இல்லையாம்.
எப்படியோ ரசிக மகா ஜனங்களால் உண்டான இந்த இமேஜை வைத்தே புழல் சிறைக்குள் எத்தனை பேரிடம் “உம்மேல இருக்கிற எல்லா கேஸையும் க்ளோஸ் பண்ணிடறேன்னு.. கவலையே படாதே”ன்னு சொல்லி வெளிய கொண்டு வர்றதுக்கு பணம் புடுங்கப் போகிறாரோ.
அந்த ஏழுகொண்டல வாடுவுக்கே வெளிச்சம்.