எவெரஸ்ட் எண்டர்டெயிண்மண்டின் தயாரிப்பில் உருவாகி வரும் கல்யாண சமையல் சாதம் ஒரு மென்மையான காதல் நகைச்சுவைப் படம். பிரசன்னா மற்றும் லேகா வாஷிங்டன் நடிக்கும் இப்படத்தின் ‘மெல்ல சிரித்தாய்’ என்ற ஒரு பாடலை டீஸராக முன்பு வெளியிட்டிருந்தார்கள்.
அறிமுக இயக்குனர் ஆர்.எஸ்.பிரசன்னா எழுதி இயக்க, ஆனந்த் கோவிந்தன் மற்றும் அருண் வைத்யநாதன் (‘அச்சமுண்டு!அச்சமுண்டு!’தயாரிப்பாளர்,இயக்குனர்
இருவரும் இணைந்து) தயாரிக்கும் இப்படத்தின் ஒலிக்கோர்வைப் பணி சமீபத்தில் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற வார்னர் ப்ரோஸ்(Warner Bros) ஸ்டூடியாவில் நிறைவடைந்தது.
குணால் ராஜன், (கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ மற்றும் ‘ஆரோ 3டி’யின் இந்திய அறிமுக புகழ்) இப்படத்தில் ஒலிமேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார். தயாரிப்பாளர்கள் ஆனந்த் கோவிந்தன்,அருண் வைத்யநாதன் மற்றும் படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.பிரசன்னா ஆகியோர் ஜுன் மாதத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் வார்னர் ப்ரோஸ் அரங்கத்தில் நைடெபற்ற
இறுதிகட்ட ஒலிக்கோர்வையில் முழுவதும் உடன் இருந்தனர்.
ஹாலிவுட்டின் மூத்த தொழிநுட்பக் கலைஞர்கள் இணைந்து ‘கல்யாண சைமயல் சாதத்தின்’ ஒலிச்சேர்ப்புக்கு ஒரு சர்வேதச தரத்தை அளித்துள்ளனர். டாம் மார்க்ஸ், (ஒலிச்சேர்வையாளர் ‘தி மேன் ஆஃப் ஸ்டீல்’), புருஸ் நிஸ்னிக் (ADR மேற்பார்வையாளர் ‘சின் சிட்டி’ மற்றும் ஸ்பே’ஸ் ஜாம்’), ரி (‘கேப்டன் அமெரிக்கா’) ஆகிய அனைவரும் ‘கல்யாண சைமயல் சாதம்’ நகைச்சுவையாக உள்ளதாகக் கூறியுள்ளனர். மொழி புரியாவிட்டாலும் படத்தைப் பார்த்து ரசிக்க முடிந்ததாகவும், இந்திய கல்யாண கலாச்சாரத்தைப் பற்றிய விஷயங்களை அறிந்து கொள்ள உதவியதாகவும் கூறினராம். வெள்ளக்காரனுங்க நம்ப பழைய சோத்தையே ஆராய்ச்சி பண்ணி அதில் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியா இருக்கு அதுனால அத சாப்பிட்டா உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு சொல்றவங்களாச்சே. பின்னே இது மட்டும் எப்படி பிடிக்காமப் போகுமாம்.
வழக்கமாக அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படத்தின் ஒலிக் கோர்வைக்குத் தானே ஹாலிவுட் செல்வார்கள், ஏன் ஒரு காதல் நகைச்சுவைப் படத்திற்கு ஹாலிவுட் செல்லவேண்டும் என்ற கேள்விக்கு படத்தின் இயக்குனர் அர்.எஸ்.பிரசன்னா “சினிமா ஒரு ஒலி/ஒளி அனுபவம். எங்கள் திரைப்படம் மென்னுணர்வு நகைச்சுவைப் படமானாலும், ஒலி தான் பார்வையாளர்களைக் கதையின் உலகிற்கு அழைத்துச் செல்லும். முக்கியமாக நவீன நகைச்சுவைப்படங்களிலும், சிறந்த உலக சினிமாக்களிலும், சின்ன சின்ன ஒலிகள் கவனமாகக் கோர்க்கப்பட்டு நகைச்சுவைக்கு பெரும் பங்கு வகுத்திருக்கும்.” என்று பதில் அளிக்கிறார். சுருக்கமாச் சொன்னா டப்பு ஜாஸ்தி இருக்குங்கோ.
படத்தின் முதல் பிரதி ரெடியாம். இசை வெளியீட்டுக்கான ஆயத்தங்கள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ‘கல்யாண சமையல் சாதம்’, இன்றைய இளம் வயதினர்க்கிடையே நடக்கும் காதல், கல்யாணம் அவர்களது பெற்றோர்களின் தவிப்புகளை கலாட்டாவாக வழங்கும் நகைச்சுவைப் படம். பந்தி பரிமாறட்டும் பாக்கலாம்.