பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட ‘டிமான்ட்டி காலனி-II’ கடந்த 15-8-2024 அன்று வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது.

இந்நிறுவனம் தயாரிக்கும் முதலாவது திரைப்படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்.இத்திரைப்படத்தில் வைபவ், அதுல்யா ரவி,மணிகண்டா ராஜேஷ், ஆனந்த்ராஜ், இளவரசு, ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன்,
சுனில் ரெட்டி, லிவிங்ஸ்டன், பிபின், மறைந்த ஷிஹான் ஹுசைனி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் எழுத்து மற்றும் இயக்கம், விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ், இசையமைத்திருப்பவர் டி இமான்,
பாடல் வரிகள் – கார்த்திக் நேத்தா, கருணாகரன், சூப்பர் சுப்பு, ஆஃப்ரோ, ஒளிப்பதிவாளர் – டிஜோ டோமி,
படத்தொகுப்பாளர் – சுரேஷ் ஏ பிரசாத், சண்டைப் பயிற்சி – டான் அசோக், நடன இயக்கம் – அஜய் ராஜ்.

இந்த சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் வரும் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனையொட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. திரைப்படக் குழுவினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முதலாவதாக படத்தின் கதாநாயகன் நடிகர் வைபவ் பேசும்பொழுது….

இத்திரைப்படத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு கலகலப்பான திரைப்படம். இயக்குநர்கள் விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேஷவ் ஆகிய இருவரும் இத்திரைப்படத்தை சிறப்பாகக் கொடுத்துள்ளார்கள். தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் அமெரிக்காவில் மிக முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவர். அவரது தொண்டு நிறுவனம் சார்பில் பல நல்ல விசயங்களைச் செய்கிறார். வியூகத் தலைமையாளர் மனோஜ் பெனோ அவர்களுக்கும் மிக்க நன்றி.இமான், சக நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இத்திரைப்படம் துவக்கம் முதல் மிகவும் நகைச்சுவை விருந்தாக இருக்கும். ஜூன் 20-ஆம் தேதி படம் வெளியாகிறது. ஊடக நண்பர்களும் இரசிகர்களும் தங்களது ஆதரவைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

நடிகை அதுல்யா பேசும்பொழுது….

ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படம் படப்பிடிப்பு நடக்கும்போதே கலகலப்பாக உருவாகியது. அதேபோல படம் முழுவதும் நகைச்சுவையாக இருக்கும். படம் ஜூன் 20-ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் திரையரங்கில் கண்டுகளித்து ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பிடிஜி யுனிவர்சல் தயாரிப்பில் எனக்கு இது முதல் திரைப்படம் தயாரிப்பாளருக்கும், நல்ல கதாபாத்திரம் அளித்த இயக்குநர்களுக்கும் எனது நன்றிகள். தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மிக்க நன்றி எனப் பேசினார்.

நடிகர் மணிகண்டா ராஜேஷ் பேசும் பொழுது…

எனக்கு இத்திரைப்படம் மூலம் நல்ல கதாபாத்திரம் கிடைத்ததை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். ஜாலியான திரில்லர் மற்றும் ஜாலியான சண்டைக் காட்சிகளுடன் வைபவ் மற்றும் மூத்த கலைஞர்களுடன் நடித்ததை ஒரு பாக்கியமாக கருதுகிறேன். எனக்கு வாய்ப்பளித்த மனோஜ் பெனோ மற்றும் தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் அவர்களுக்கும், அதிக ஒத்துழைப்பு அளித்த இயக்குநர்களுக்கும் படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடிகர் சாம்ஸ் பேசும் பொழுது….

நல்ல தரமான படைப்புகளை தமிழ்த் திரையுலகுக்கு அளிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் படத்தயாரிப்பில் பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கண்டிப்பாக மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுக்கும். அந்நிறுவனத்தின உரிமையாளர் பாபி பாலச்சந்திரன் மற்றும் வியூகத் தலைமையாளர் மனோஜ் பெனோ ஆகிய இருவருக்கும் மிக்க நன்றி. இரட்டை இயக்குநர்கள் இருவரும் முதல் திரைப்படத்திலேயே மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை கட்டுக்கோப்பாகக் கையாண்டு சிறப்பாகப் பணியாற்றி ஜாலியான ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கு ஒரு சிறப்பான எதிர்காலம் தமிழ்த்திரையுலகில் நல்ல எதிர்காலம் உள்ளது. என்னுடன் பணியாற்றிய சக கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடிகர் ஜான் விஜய் பேசும்பொழுது….

நடிகர் மற்றும் வில்வித்தைப் பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனியின் மாணவன் நான். அவரின் கடைசிப் படத்தில் அவருடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம். இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வர் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரம் அளித்துள்ளார். வைபவ், அதுல்யா, மணிகண்டா ராஜேஷ் ஆகியோர் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். என்னுடன் நடித்த சக கலைஞர்களுடன் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என முடித்தார்.

நடிகை சூர்யா கணபதி பேசும்பொழுது….

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் எனக்கு முக்கியமான கதாபாத்திரம் அளிக்கப்பட்டுள்ளது. சிறிய கதாபாத்திரம் என்றாலும் கண்டிப்பாகப் பேசப்படும்படி இருக்கும். இந்த வாய்ப்பளித்த விக்ரம் ராஜேஷ்வருக்கு நன்றி. வியூகத் தலைமையாளர் மனோஜ் பெனோ அவர்களை நீண்ட நாட்களாகத் தெரியும். அவருக்கும் படப்பிடிப்பில் நான் மகிழ்ச்சியாக உணர வைத்த சக நடிகர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

சண்டைப் பயிற்சியாளர் டான் அசோக் பேசியதாவது….

மழையிலும் இந்நிகழ்வுக்கு வந்து ஆதரவளித்த ஊடக நண்பர்களுக்கு நன்றி. இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் பிடிஜி யுனிவர்சல் பாபி பாலச்சந்திரன் மற்றும் வியூகத் தலைமையாளர் மனோஜ் பெனோ ஆகிய இருவருக்கும் நன்றி. இரட்டை இயக்குநர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். வைபவ் அவர்களுடன் நீண்ட நாட்களாகத் திரைத்துறையில் பயணித்துள்ளேன். படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. அனைவரும் படத்தை திரையரங்கில் வந்து பார்த்து ஆதரவளியுங்கள் என முடித்தார்.

இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வர் பேசும்பொழுது….

எட்டு வருடங்களுக்கு முன் இப்படத்தின் கதையை மனோஜ் பெனோ அவர்களிடம் கூறினேன்; எட்டு வருடங்களுக்குப் பிறகும் கூட என்மீது நம்பிக்கை வைத்து பாபி பாலச்சந்திரனின் பிடிஜி யுனிவர்சல் சார்பில் இப்படத்தை தயாரித்தது எனக்குப் பெருமகிழ்ச்சியை அளித்தது. படத்தின் கதை எழுதும்போதே வைபவ் தான் கதாநாயகன் என்று முடிவெடுத்து விட்டேன்; அதேபோல தமிழ் தெரிந்த கதாநாயகி வேண்டும் என்பதால் அதுல்யாவைத் தேர்ந்தெடுத்தோம். அதே போல இசையமைப்பாளர் இமானும் நானும் பள்ளிக்காலத் தோழர்கள், அவர் இந்தப் படத்தில் பணியாற்றியது கனவு பலித்தது போன்று இருந்தது. மேலும் மூத்த கலைஞர்களுடன் பணியாற்றியது 5 படங்களில் பணியாற்றியது போல இருந்தது. தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்தனர். படத்தயாரிப்புக் குழுவுக்கும் உதவி இயக்குநர்களுக்கும் மிக்க நன்றி என நிறைவு செய்தார்.

பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வியூகத் தலைமையாளர் மனோஜ் பெனோ பேசும்பொழுது….,

பல்துறை வித்தகராக விளங்கும் பாபி பாலச்சந்திரன் அடுத்ததாக திரைப்படத் தயாரிப்பிலும் கால்பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கப் பட்டதே பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட். ஏற்கனவே உள்ள துறைகளில் வெற்றி கண்டதைப் போலவே இந்தத் துறையிலும் சாதிக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கம். அதற்கு அவர் அமைத்த குழுவே எங்களுடைய பிடிஜி படத் தயாரிப்புக் குழு. அவரைப் போன்ற பெருமைக்குரிய நபருக்கு மென்மேலும் பெருமை சேர்ப்பதே எங்களுடைய கடமை மற்றும் பொறுப்பு. மேலும் அவருக்கு சினிமா துறையில் அதீத ஈடுபாடு உண்டு. நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்பதில் எங்கள் நிறுவனம் உறுதியாக உள்ளது. திறமையான நடிப்பை வெளிப்படுத்திய வைபவ் மற்றும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு சிறப்பான பங்களிப்பை அளித்த அதுல்யா மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் ‘எக்ஸ்டெர்ரோ’ குழுவினருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.