பிரபாஸ் நடிக்கும் தி ராஜாசாப் திரைப்படத்தின் டீசர், பழமையான புராணக் கதைகள், திகில் மற்றும் மர்மங்களை நேர்த்தியாக இணைத்து, பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.  தமன் எஸ் பின்னணி இசை அமைத்துள்ளார்.

ஹைதராபாத்தில் போடப்பட்ட ஹாரர்-ஃபான்டஸி குகை போன்ற அரங்கத்தில் இந்த விழா நடந்தது. அந்த மர்மக் குகையில், பத்திரிகையாளர்களும் விருந்தினர்களும் நுழைந்து பழங்கால மாளிகை, இருளின் ஜாலங்கள், மெழுகுவர்த்திகளால் ஒளிரும் பாதைகள், மற்றும் மர்மங்களால் நிரம்பிய சுற்றுச்சூழலை நேரில் அனுபவித்தனர்.

இயக்குநர் மாருதி, தயாரிப்பாளர் டி.ஜி. விஷ்வ பிரசாத், இசையமைப்பாளர் தமன் எஸ், மற்றும் ரெபல் ஸ்டார் பிரபாஸ் ஆகியோர் மேடையில் தோன்றி ரசிகர்களிடம் பேரதிர்வை ஏற்படுத்தினர். 

டீசரில் பிரபாஸ் இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் வெளிப்படுகிறார் — ஒன்று ஸ்டைலிஷான ஹீரோ தோற்றம்; மற்றொன்று இருண்ட, மர்மமிக்க, பரபரப்பூட்டும் தோற்றம். 

டீசரின் இறுதியில் தோன்றும் சஞ்சய் தத், அதிரடியான தோற்றத்துடன் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.

நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார் போன்ற நடிகைகளும் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

தயாரிப்பாளர் டி.ஜி. விஷ்வ பிரசாத் கூறியதாவது:

“தி ராஜாசாப்’ஐ ஆரம்பித்த போது, இந்தியா இதுவரை கண்டிராத வகையில் ஒரு பெரிய படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. இன்று ரசிகர்கள் முன்னிலையில், பிரம்மாண்ட அரங்கில் டீசரை வெளியிட்டதே, அந்த உலகத்தில் நம்மை நேரடியாக எடுத்து செல்வது போலவே உணர்ந்தோம். இது இன்னும் ஆரம்பமே!”

இயக்குநர் மாருதி கூறியது:

“தி ராஜாசாப் என்பது வழக்கமான ஜானரை மீறிய ஒரு தனித்த பயணம். ஹாரர், ஃபான்டஸி, உண்மை, மாயை—இவை அனைத்தையும் இணைக்கும் இந்தப் பயணத்தில், நெஞ்சை பதைக்கும் உணர்வுகளும் உள்ளன. பிரபாஸின் சொந்த ஊரில் இந்த டீசரை வெளியிடுவதே, ஒரு மறக்க முடியாத அனுபவம்.”

People Media Factory தயாரித்துள்ள இந்த பான் இந்தியத் திரைப்படம் 2025 டிசம்பர் 5 அன்று, தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது — இது மாயாஜாலம் கலந்த மர்ம உலகுக்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் ஒரு பான் இந்திய சினிமா அனுபவமாக அமையும்!

 

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.