அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க,காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சரண்டர்”.

இப்படத்தில்,பாடினி குமார் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மன்சூர்அலிகான்,லால்,சுஜித் ஷங்கர், முனிஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவு : மெய்யேந்திரன்,
இசை : விகாஸ் படிஸா, படத்தொகுப்பு: ரேணு கோபால்,கலை இயக்குநர்: ஆர்.கே.மனோஜ் குமார்
சண்டைப்பயிற்சு: ஆக்‌ஷன் சந்தோஷ்
ஒலி வடிவமைப்பு: கே.பிரபாகரன் & பி.தினேஷ் குமார்

அப்பீட் பிக்சர்ஸ் (Upbeat Pictures) சார்பில், தயாரிப்பாளர் விஆர்வி.குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள, இப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா,ஜூலை 23 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

இசையமைப்பாளர் விகாஸ் படிஸா பேசியதாவது..

எனக்குத் தமிழில் திரையரங்கில் வெளிவரும் முதல்படம், இதற்குமுன் தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸ் செய்திருந்தேன், எனக்கு முதல் வாய்ப்பளித்த அறிவழகன் சாருக்கு நன்றி. இப்படத்தின் தயாரிப்பாளர் குமார் சாருக்கு நன்றி. இப்படத்தில் எல்லோருமே கலக்கியிருக்கிறார்கள். இயக்குநர் கௌதம் சார் படத்தை வேற லெவலில் செய்துள்ளார்.நிறைய உழைத்துள்ளார்.தர்ஷன் இதில் கலக்கியிருக்கிறார்.படம் பார்த்து அவரா இது?என ஆச்சரியப்பட்டேன்.என் மியூசிக்குழுவிற்கு நன்றி. ஆகஸ்ட் 1 அன்று படம் வெளியாகிறது எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

YouTube player

எடிட்டர் ரேணு கோபால் பேசியதாவது…

இது என் முதல்படம், என்னை அறிமுகப்படுத்திய இயக்குநருக்கும்,தயாரிப்பாளருக்கும் நன்றி. படம் மிக நன்றாக வந்துள்ளது என்றார்.

கலை இயக்குநர் மனோஜ் பேசியதாவது…

இது என் மூன்றாவது படம்,அறிவழகன் சார் தான் என்னை அறிமுகப்படுத்தினார்,அவரது அஸிஸ்டெண்ட் கௌதம் சார் இப்படத்தில் வாய்ப்பு தந்துள்ளார்.செட் எல்லாம் ரியலாக இருக்கவேண்டும் என முதலிலேயே சொல்லிவிட்டார்.அப்படித்தான் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளோம்.படம் மிக நன்றாக வந்துள்ளது என்றார்.

நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது..,

தயாரிப்பாளர் அமெரிக்காவிலிருந்து வந்து இப்படத்தை எடுத்துள்ளார்.தயாரிப்பாளர் குமாருக்கு வாழ்த்துகள். இயக்குனர் கௌதம்,ஈரம் அன்பழகனிடமிருந்து வந்து இப்படத்தை எடுத்துள்ளார்.மிக அற்புதமாக இப்படத்தை எடுத்துள்ளார்.செட் எல்லாம் அப்படியே ஒரிஜினலாக இருந்தது.தர்ஷன் அருமையாக நடித்துள்ளார்.இந்த மாதிரி புதியவர்களை ஊக்குவிக்கும் தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துகள்.சினிமாவில் தொடர்ந்து ஒரேமாதிரி படங்கள் மட்டுமே வருகிறது அது மக்களுக்கு போரடிக்கிறது.அவர்களுக்கு வித்தியாசமான படங்களைக் கலைஞர்கள் தர வேண்டும்.அதேமாதிரியான படமாக சரண்டர் சரியான நேரத்திற்கு வருகிறது.இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.

நடிகை பாடினி குமார் பேசியதாவது…

எனக்கு வாய்ப்பளித்த கௌதம் சாருக்கு நன்றி.சரண்டர் படம் ஹார்ட்ஒர்க், விடாமுயற்சி எல்லாம் சேர்ந்ததுதான் இப்படம்.கேமராவுக்கு முன்னும் பின்னும் எல்லா கலைஞர்களும் மிகவும் கடினமாக உழைத்துள்ளனர். ஆகஸ்ட் 1 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. நீங்கள்தான் இப்படத்திற்கு முழுஆதரவைத் தர வேண்டும் என்றார்.

எடிட்டர் சாபு ஜோசப் பேசியதாவது…

என்னோட அஸிஸ்டெண்ட் ரேணுகோபால் படம் செய்துள்ளார்.மகிழ்ச்சி.இயக்குநர் கெளதமை முதலில் பார்க்கும்போதே அவர் ஒரு இயக்குநர் போலத்தான் இருந்தார்.அவரிடம் நிறையக்கதைகள் இருந்தன. கோடம்பாக்கத்தில் முதல்படம் செய்துவிட கனவுகளோடு பலர் காத்திருக்கின்றனர்.அந்தவகையில் கௌதம் இப்படம் செய்துள்ளது மகிழ்ச்சி.இப்படத்தில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு தந்துள்ள தயாரிப்பாளர் குமார் அவர்களுக்கு நன்றி.அஸிஸ்டெண்ட் ரேணுகோபால் 6 வருடம் என்னுடன் வேலை செய்தவர்.சினிமாவில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்.அவர் பெரிய அளவில் வருவார். இந்த டீமில் எல்லாருமே என் நண்பர்கள்தான்,அனைவரும் பெரிய வெற்றிபெற வாழ்த்துகள் என்றார்.

இயக்குனர் கௌதம் கணபதி பேசியதாவது…

இது எனக்கு முதல்மேடை,என் குரு அறிவழகன் சார் இங்கு வந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி.இப்படத்தை மிக நேர்மையாக எடுத்துள்ளோம்.படத்தில் பாட்டு இல்லை,தேவைப்படவில்லை,தர்ஷனும் எனக்கு இது மாதிரி வேண்டும் என எதையுமே கேட்கவில்லை. கேமராமேன்,எடிட்டர்,இசை என எல்லாமே அறிவழகன் சாரிடமிருந்து வந்தவர்கள்தான்.ஒரு டீமாக எல்லோரும் உழைத்துள்ளோம்.படம் மிக நேர்த்தியாக வந்துள்ளது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.

இயக்குநர் அறிவழகன் பேசியதாவது…

என்னுடைய உதவிஇயக்குநர் கௌதம் இயக்கியுள்ள படம் சரண்டர்.இந்த மொத்தக்குழுவும் என்னுடன் வேலை செய்தவர்கள்தான்,இவர்களுக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் குமார் அவர்களுக்கு நன்றி.டிரெய்லர் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.மனோஜ் சப்தம் படம் செய்தவர்.இப்படத்தில் மிக நேர்த்தியாகச் செய்துள்ளார். எடிட்டர் ரேணு என் எடிட்டர் சாபுவின் அஸிஸ்டெண்ட். மிக நுணுக்கமாகப் படத்திற்கு என்ன தேவையோ அதைச் சிறப்பாகச் செய்பவர்.இப்படத்திலும் சிறப்பாகச் செய்துள்ளார்.ஸ்டண்ட் மாஸ்டர் சிறப்பாகச் செய்துள்ளார்.இசையமைப்பாளர் விகாஷ் படிஸா தமிழ் ராக்கர்ஸ் செய்தார்.அவர் என்னிடம் அறிமுகமானபோது, முதலில் ஒரு டிராக் செய்யுங்கள் எனக்கேட்டேன், அதிலேயே அசத்திவிட்டார்.மிகத்திறமைசாலி. படத்திற்கான முழுஉழைப்பை எப்போதும் தந்துவிடுவார். தர்ஷன் அவர் வந்த பிக்பாஸ்தான் நான் முழுமையாகப் பார்த்தது.நான் லவ் சப்ஜெக்ட் எடுத்தால் அவரை ஹீரோவாக போடவேண்டும் என நினைத்தேன்.கௌதம் அவரை இப்படத்தில் நடிக்கவைத்தது மகிழ்ச்சி. கௌதம் மிகச்சிறப்பான ஒரு படத்தைத் தந்துள்ளார் அனைவரும் ஆதரவு தாருங்கள்.படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.

YouTube player

நடிகர் தர்ஷன் பேசியதாவது..

இங்கு வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் நன்றி. கௌதம் சாருக்கு நன்றி,அவர் எப்போதும் என்னை மிகப்பெரிய ஹீரோ போலதான் நடத்தினார்.எனக்காக என்னுடன் எப்போதும் நிற்கிறார்.தயாரிப்பாளர் குமார் சார் ஒரு கதையை நம்பி,புது டீமை நம்பி,இவ்வளவு செலவு செய்து படம் செய்துள்ளார்.அவருக்கு நன்றி. நாங்கள் ஷூட்டில் எவ்வளவு டிஸ்கஸ் செய்தாலும் ரேணுவிடமும் கேட்டுக்கொள்வோம் என்று சொல்வார்கள். அவர் நாங்கள் என்ன எடுத்தாலும் பெரிதாகப் பாராட்ட மாட்டார்.ஓகே என்றுதான் சொல்வார்.எனக்கு இப்போது புதிதாக கதை சொல்ல வந்தவர்கள் அவர்தான் என்னை ரெஃபர் செய்ததாகச் சொன்னார்கள் நன்றி சார்.என்னை அழகாகக் காட்டிய கேமராமேனனுக்கு நன்றி.மன்சூர்அலிகான் போல ஒரு சீனியர் ஆக்டருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி.அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன்.படத்தில் எல்லோரும் கடின உழைப்பைத் தந்துள்ளனர்.என்னை மக்களிடம் சேர்த்த பத்திரிகை நண்பர்கள் இப்படத்தையும் சேர்த்து விடுங்கள் நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.