ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் நடிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ‘புல்லட்’ அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தின் விறுவிறு டீசரை விஷால், எஸ் ஜே சூர்யா, பிருத்விராஜ், ஜி வி பிரகாஷ் வெளியிட்டனர்
‘புல்லட்’ திரைப்படத்தின் தெலுங்கு டீசரை நாக சைதன்யா வெளியிட்டார்
#Bullet (Tamil) Teaser –

28 ஆண்டுகளுக்குப் பிறகு டிஸ்கோ சாந்தி ஶ்ரீஹரி ‘புல்லட்’ படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் ரீ-எண்ட்ரி
ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன், அருள்நிதி நடித்த ‘டைரி’ வெற்றிப் படத்திற்குப் பிறகு இயக்குநர் இன்னாசி பாண்டியன் உடன் மீண்டும் இணைந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘புல்லட்’ படத்தை தயாரித்துள்ளார்.
விறுவிறுப்பான அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் இத்திரைப்படம் தயாராகி உள்ளது.
‘புல்லட்’ படத்தின் தமிழ் டீசரை நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா, பிருத்விராஜ் மற்றும் ஜி வி பிரகாஷ் குமார் இன்று வெளியிட்டனர், தெலுங்கு டீசரை நாக சைதன்யா வெளியிட்டார். படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் வகையில் டீசர் உருவாகியுள்ளதாக படக்குழுவினரை அவர்கள் பாராட்டினர்.
எண்பதுகள் மற்றும் 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக விளங்கிய டிஸ்கோ சாந்தி ஸ்ரீஹரி இப்படத்தின் மூலம் 28 ஆண்டுகளுக்குப் பிறகு திரையுலகில் மீண்டும் தடம் பதிக்கிறார். கடந்த 1997ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் இவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டிஸ்கோ சாந்தி ஸ்ரீஹரி ‘புல்லட்’ படத்தில் மிக முக்கியமான ஒரு வேடத்தில் நடித்துள்ளார்.
வைஷாலி ராஜ், சுனில், அரவிந்த் ஆகாஷ், காளி வெங்கட், ரங்கராஜ் பாண்டே, ஆர். சுந்தர்ராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, கே பி ஒய் வினோத், விஜே தணிகை, சென்ராயன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘புல்லட்’ படப்பிடிப்பு சென்னை, தென்காசி, கேரளா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது
படத்தைப் பற்றி பேசிய இயக்குநர் இன்னாசி பாண்டியன், “இது ஒரு முழு நீள அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லர் திரைப்படம். இதை ரசிகர்களுக்கு உணர்த்தும் வகையில் டீசர் அமைந்துள்ளது. இந்த கதையை தான் நான் எனது முதல் திரைப்படமாக இயக்க இருந்தேன், ஆனால் ஒரு சில காரணங்களால் அது இயலவில்லை. எனவே இதை எனது இரண்டாவது படமாக தற்போது இயக்குகிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தயாரிப்பாளர் கதிரேசன் அவர்களுக்கு நன்றி,” என்று கூறினார்.
இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, ‘டிமான்டி காலனி’,
‘டைரி’ உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். படத்தொகுப்பை வடிவேலு விமல்ராஜ் மேற்கொள்ள, சண்டை காட்சிகளை பேண்ட்டம் பிரதீப் வடிவமைத்துள்ளார்.
ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடிக்கும் ‘புல்லட்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
*