காஜல் காஜல்னு ஒரு நடிகை இருந்தாங்கோ இல்லீங்களா.. பெரிய குண்டு குண்டான கண்களோட குழந்தையா சிரிச்சுட்டு இருக்கிற காஜல் போன வருடம் பல தமிழ் முண்ணனி ஹீரோக்களின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இன்று அவர் ஆளையே காணோம். என்னடாவென்று விசாரித்தால் இதெல்லாம் தயாரிப்பாளர்கள் சேர்ந்து செய்யும் கூத்து என்பது தெரிகிறது.
தமிழில் காஜலுக்கு ஜில்லா மற்றும் ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய இரண்டே படங்கள் மட்டும் கைவசம் இருக்கின்றன. தெலுங்கில் நாயக், பாட்ஷா என்று ஹிட் படங்களில் நடித்திருந்தும் பவன் கல்யாண், மகேஷ் பாபுக்களின் அடுத்த படங்களில் காஜல் இல்லை.
எல்லா நடிகைகள் போல் புகழின் உச்சிக்குப் போன அவர் தனது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தியிருக்கிறார். வந்ததே தயாரிப்பாளர்களுக்கு கோபம். அதெப்படி ஒரு ஹீரோயின் கோடி ரேஞ்ச்சில் சம்பளம் கேட்பது. ஹீரோக்களுக்கு பத்து முதல் 20 கோடி வரை கொடுத்து அடுத்து குனியவும் ரெடியாயிருக்கும் இதே தயாரிப்பாளர்களுக்கு ஹீரோயின் இவ்வளவு பணம் கேட்கும் போது.. ஆப்டர் ஆல் ஒரு ஹீரோயினுக்கு இவ்வளவு பணமா என்று கோபம் வந்தது ஞாயமோ ஞாயம்.
அத்தோடு காஜல் விட்டிருந்தால் பரவாயில்லை. வயதான கிழட்டு ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று 60இலும் காலேஜ் ஹீரோவாக நடிக்கும் ஹீரோக்கள் நிறைந்த தமிழ் கூறும் நற்சினிமா உலகில் கூறிவிட்டார்.
பார்த்தார்கள் தயாரிப்பாளர்கள். தங்களுக்குள் கூடிப் பேசினார்கள். இந்த மடம் இல்லாவிட்டால் சந்தை மடம் என்று அசால்ட்டாக அடுத்து என்னவேணா குடுங்க லிஸ்ட்டில் இருக்கும் ஹீரோயின்களான ஹன்ஸிகா, டாப்ஸி, சமந்தா, அமலா பால், ஸ்ருதி என்று புக் பண்ணிக் கொண்டார்கள். சரியாக பேசிவைத்து அனைவரும் காஜலை ஓரங்கட்டி விட்டார்கள்.
காஜல் ஒன்றும் நந்திதா தாஸ் போல தன் நடிப்பை முன்னிலைப் படுத்தும் நடிகை அல்ல. தனது கொழுக் மொழுக் அழகாலும், சிரிப்பாலும் ரசிகர்களின் மனதில் கொஞ்ச வருடமாவது இடம் பிடிக்கலாம் என்கிற அளவில் மட்டுமே நடிப்பவர். அவர் என்ன செய்து இதிலிருந்து தப்பிப்பார் ? வேறு வழியில்லை சரண்டர் தான். சம்பளக் குறைப்பு. தயாரிப்பாளர்களுக்கு தூது விடல் என்று பல படிகள் கீழிறங்கினால் தான் மீண்டும் படங்களில் அவர் தலைகாட்ட முடியும் போலிருக்கிறது.
நம் பாசமிகு அம்மா இளைய தளபதி விஜய்யின் தலைவாவுக்கு வைக்கும் ஆப்பின் முன்னால் இது ஒன்றும் பெரிய ஆப்பில்லை தான். (மேலும் விவரங்கள் தெரிய வினவு இணைய தளத்தில் வந்திருக்கும் ஓடு தலைவா ஓடு கட்டுரையைப் படிங்க)