கிரவுட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் “ஹே ப்ரூஸ்” என்ற புதிய தமிழ் மியூசிக் வீடியோ கடந்த மார்ச் 27 அன்று வெளியிடப்பட்டது. கிரவுட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் டிஆர்கே கிரண் மற்றும் இந்திரா ராஜேந்திரன் இணைந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம் ஆகும்.

இந்த மியூசிக் வீடியோவை ஆர்ட் டைரக்டர் டிஆர்கே கிரண் இயக்கியுள்ளார்.

இந்த மியூசிக் வீடியோ வெளியீட்டிற்கு நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா , நடன இயக்குனர் / நடிகர் சாண்டி மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் வெளியீட்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.

இந்த மியூசிக் வீடியோவில் குரேஷி, தாய்மண்னே சந்தோஷ், VJ கல்யாணி, பூவி மற்றும் பர்வீன் உள்ளிட்ட கலைஞர்கள் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு இந்த பாடலுக்கு கூடுதல் ஈர்ப்பையும் தாக்கத்தையும் அளித்துள்ளது.

இந்த மியூசிக் வீடியோவின் ஒளிப்பதிவு / எடிட்டிங் பிரணவ் காந்த் மேற்கொண்டுள்ளார். மேலும், இந்த பாடலுக்கான நடன இயக்கத்தை ரிச்சி ரிச்சர்ட்சன் கவனித்துள்ளார்.

இந்த பாடலின் இசையை அச்சு ராஜாமணி அமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை வழங்கிய அவர், இந்த மியூசிக் வீடியோ மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.

இந்த பாடல் யூடியூபில் வெளியாகி, குறுகிய காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

“ஹே ப்ரூஸ்” — புதிய தலைமுறை தமிழ் இசையில் வித்தியாசமான முயற்சியாக உருவெடுத்து, உலகம் முழுவதும் கவனம் பெற்று வருகிறது.

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.