13 ஏப்ரல் 2026

வணக்கம்,
திரைத்துறையில் புதிய திறமைகளை அடையாளப்படுத்தியது போலவே, எழுத்துலகிலும் ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்க “மில்லியன் டாலர் பப்ளிகேஷன்” தனது பயணத்தை இனிதே தொடங்குகிறது.

இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்துவதும், அவற்றை எதிர்காலக் காட்சி ஊடகங்களுக்கான வலுவான அடித்தளமாக மாற்றுவதுமே எங்களின் முதன்மை நோக்கம்.

நிறுவனர் திரு. யுவராஜ் கணேசன் அவர்களின் வழிகாட்டலில், இப்புதிய முன்னெடுப்பைத் திறம்பட வழிநடத்திச் செல்ல பின்வரும் நிர்வாகக் குழு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது:

நிர்வாகக் குழு:
பதிப்பாளர்: திரு. யுவராஜ் கணேசன்
துறைத் தலைவர்: திரு. புளியந்தோப்பு மோகன்
முதன்மைப் பொறுப்பாசிரியர்: திரு. ஷாஜன் கவிதா
தலைமை வடிவமைப்பு: திருமதி. ரேவதி

எங்களின் இந்த இலக்கிய முயற்சிக்கும் உங்களின் மேலான அன்பையும் பேராதரவையும் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்,
யுவராஜ் கணேசன்
நிறுவனர், மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் & பப்ளிகேஷன்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.