நாடோடிகள், கோரிப்பாளையம், பட்டத்துயானை உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த எஸ். மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் படநிறுவனம், இயக்குநர் வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி படநிறுவனத்துடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. ஈட்டி என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தில் ஓட்டப்பந்தய வீரராக நடிக்கிறார் அதர்வா. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடிக்கிறார்.
மற்றும் ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் நரேன், சோனியா உட்பட மேலும் பல கலைஞர்கள் நடிக்கின்றனர்.
இயக்குநர் வெற்றிமாறனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ரவி அரசு இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
சசி இயக்கிய 555 படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சரவணன் அபிமன்யூ இப்படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். பாடல்களை நா.முத்துகுமாரும், ஏகாதசியும் எழுதுகிறார்கள். நடன அமைப்பை தினேஷ் கவனிக்கிறார்.
பருத்திவீரன் படத்துக்காக தேசியவிருது பெற்ற ராஜாமுகம்மது படத்தொகுப்பு செய்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் கலை இயக்குநரான துரைராஜ் இப்படத்திற்கு கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். நிர்வாகத் தயாரிப்பு: சொக்கலிங்கம்.
தயாரிப்பு நிர்வாகம்: அசோக், சிவா. தயாரிப்பு: எம். செராஃபின் சேவியர் – குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட்
இயக்குநர் வெற்றிமாறன் – க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி
பரதேசிக்குப் பின் படவாய்ப்புக்கள் இல்லாதிருந்த அதர்வா இப்படத்தின் மூலம் மீண்டும் தனக்கு புத்துயிர் கிடைக்கும் என்று நம்புகிறார்.