silk-smitha-remake1

சிலுக்கு சுமிதாவின் சதையைத் தழுவி இந்தியில் எடுக்கப்பட்ட ’த டர்ட்டி பிக்‌ஷர்’ மாபெரும் வசூலைக்கொட்டினாலும் கொட்டியது, அது பலபேரின் வயித்தெரிச்சலையும் வாங்கிக்கட்டியது.

‘’சிலுக்கை நான் தான் தமிழில் அறிமுகப்படுத்தினேன். எனவே சிலுக்கின் அந்தரங்கம் எனக்கு மட்டுமே தெரியும். என்னிடம் கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட ‘டர்ட்டி பிக்‌ஷர்’ ஒரு வெட்டி பிக்‌ஷர். தமிழில் அதை எப்படி எடுத்துக்காட்டுகிறேன் பாருங்கள் என்று சில நாட்கள் முன்புவரை உறுமிக்கொண்டிருந்த வினு சக்ரவர்த்தி,

இதுவரை அதுதொடர்பான எந்த வேலைகளிலும் ஈடுபடாத நிலையில், கேரளாவில் சிலுக்கை சொந்தம் கொண்டாடும் ஒரு கூட்டம் படப்பிடிப்புக்கே தயாராகிவிட்டது.

சிலுக்கை முதன்முதலில் மலையாளத்தில் அறிமுகப்படுத்திய பழைய இயக்குனர் அந்தோனி ஈஸ்ட்மென் கதை எழுத, இரட்டை இயக்குனர்களான அனில்-பாபுவில் அனில், இந்தப்படத்தை இயக்குகிறார். ‘சாக்‌ஷில் ஸ்ரீமன் சாதுண்ணி’ என்ற ஒரு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே சிலுக்குடன் தனக்கு பணிபுரிந்த அனுபவம் உண்டு என்று ஓபனாக ஒப்புக்கொள்ளும் அனில், தனது கதாசிரியர் அந்தோனி ஈஸ்ட்மெனுக்கு சிலுக்குடன் நல்ல பரிச்சயம் உண்டு என்பதால், அவர் கதையை பிரமாதமாக வடித்திருப்பதாக சிலாகிக்கிறார்.

‘’இந்தி டர்ட்டி பிக்‌ஷர்’ நடிகை சிலுக்கு சுமிதா பற்றிய வெறும் கற்பனையான படைப்பாக வெளிவந்தது. எங்கள் கதையோ சிலுக்கை வெகு நெருக்கமாக உணரவைக்கும் பாருங்கள்’’ என்கிறார் அனில்.

சிலுக்கைப்பற்றி இதே போன்ற ஒரு பகுத்தறிவு கருத்தை பகிர்ந்தபடி, கன்னடத்திலும் ஒரு குரூப் படப்பிடிப்புக்கு கிளம்ப தயாராகிவருகிறது.

ஆனா ரொம்ப நாளா சிலுக்கைப்பத்தி செறுமலும், உறுமலுமா அலையிற வினுசக்ரவர்த்தி சார் மட்டும்தான் வீட்டைவிட்டு வெளிய கிளம்புற மாதிரி கூட தெரியலை.
silk-smitha-remake2-4may12
silk-smitha-remake-4may12

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.