கடவுள் இல்லை என்று சொல்லி வருபவர் கமல்.

ஆனால் கடவுளுக்கு நிகராக,
இன்னும் சொல்லப்போனால் கடவுளுக்கும் மேலாக கமலை மதிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.
அவர்களில் முதலாமவர் மறைந்த இயக்குநர் மகேந்திரன்.
அவர் இயக்கத்தில் உருவான முதலாவது படைப்பான ‘முள்ளும் மலரும்’ படத்தை, முழுவதும் முடிக்க முடியாமல், கை விட்டு விட்டுப் போய் விட்டார் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்.
‘என்ன செய்வது’ என்று மகேந்திரன் கைகளைப் பிசைந்து கொண்டு தவித்துப் போய் நின்ற அந்த இக்கட்டான நேரத்தில் ஓடி வந்து கை கொடுத்து, படப்பிடிப்புக்குத் தேவையான பண உதவியை செய்து, அந்தப் படம் வெளிவருவதற்குக் காரணமாக இருந்தவர் கமல்.
‘என் உயிர் உள்ளவரை கமலை மறக்க மாட்டேன்’ என்று கண்கள் கலங்க, பல மேடைகளில் இதைச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் மகேந்திரன்.
அது போல பாலு மகேந்திராவிற்கும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்ட நேரங்களில், அவருக்கு படம் இயக்க உதவி செய்து பண உதவியும் செய்து இருக்கிறார் கமல்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக கமல் என்ற வார்த்தையைச் சொன்னாலே கண்கள் கலங்க கையெடுத்துக் கும்பிட்டு கடவுளுக்கு நிகராக கமலை நன்றியுடன் நினைப்பவர் நடிகை சௌகார் ஜானகி.
அதற்குக் காரணம்…
‘ஹே ராம்’ படம் உருவாகிக் கொண்டிருந்த நேரம்.
ஆரம்பத்தில் ‘ஹேராம்’ படத்தில் நடிப்பதற்கு சௌகார் ஜானகியை ஒப்பந்தம் செய்திருந்தார் கமல்.
அப்போதுதான் எதிர்பாராத அந்த விஷயம் நிகழ்ந்தது. சவுகார் ஜானகிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
சௌகார் ஜானகி :
“ஹே ராம் சமயத்தில்,
நான் சும்மாதான் வீட்டில் இருந்தேன்.
பல வருடங்களாக யாரும் என்னை படங்களில் நடிக்க அழைக்கவில்லை.
அந்த நேரத்தில் ‘ஹே ராம்’ படத்தில் நடிக்க கமல்ஹாசன் என்னை அழைத்தார். சந்தோஷமாகச் சம்மதித்தேன். ஆனால் ஒரே ஒரு காட்சியில் மட்டும்தான் நடித்தேன்.
அதற்குள் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உடனடியாக ஆப்பரேஷன் செய்ய வேண்டிய சூழ்நிலை.
மேற்கொண்டு அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டது.
அப்போதுதான் கமல், அந்த ஆச்சரியத்தை செய்தார்.
நான் அவரது படத்தில் நடிக்காவிட்டாலும் கூட, ‘ஹேராம்’ படத்திற்காக எனக்குப் பேசிய தொகையை, மொத்தமாக, ஒரே செக்காக அனுப்பி வைத்தார் கமல்.
அவரது அந்த அன்பிலும் அக்கறையிலும், நான் கண் கலங்கிப் போனேன். அந்த தொகைதான் என் ஆப்பரேசன் செலவுக்கு உதவியது.
கமல் காலத்தாற் செய்த அந்த உதவியை, என் வாழ்நாளில் என்றென்றும் நான் மறக்க மாட்டேன் !”
இப்படிச் சொல்லியிருந்தார் சௌகார்ஜானகி.
இதைப்போல பலருக்கும் பல்வேறு சந்தர்ப்பங்களில் காலமறிந்து பலப் பல உதவிகளைச் செய்திருக்கிறார் கமல்.
கமலை உலகநாயகன் என்றும் ஆண்டவர் என்றும் அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகிறார்கள்.
அந்தப் புகழ்ச்சிகளுக்கும் பாராட்டுக்களுக்கும் நூற்றுக்கு நூறு தகுதியானவர் கமல்ஹாசன்.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது.
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால், உலகைவிட மிகப் பெரிதாகும்.
நன்றி: John Durai Asir Chelliah

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.