வடசென்னையில் பிரபலமான விளையாட்டு என்ன என்று கேட்டால் கிரிக்கெட், புட்பால், கபடி, கில்லி, பட்டம் விடுறது, கேரம்போர்டு, சீட்டுக் கட்டு, மூணுசீட்டு என்று பட்டியல் நீளும். ஆனால் யாரும் யோசிக்காத குத்துச்சண்டை தான் ஒருகாலத்தில் வடசென்னையில் பிரபலம் என்கிறார் இயக்குனர்
சுப்பிரமணிய சிவாவின் உதவியாளரான விஜயகுமார்.
இவர் இயக்கவிருக்கும் முதல் படமான ‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’ படத்தின் ஹீரோ வடசென்னையிலிருக்கும் ஒரு இளைஞன். வடசென்னையில் பிரபல ரவுடிகள் பலரும் குத்துச் சண்டை வீரர்களாம். ஹீரோவும் அதுபோல குத்துச் சண்டையில் நம்பர் ஒன்னாக ஆகி அதன் மூலம் தாதாவாக நினைக்கிறாராம்.
ஆனால் அவருக்குக் கிடைப்பதுவோ ஒரு நல்ல குருநாதர். அந்த குருநாதர் அவனை நல்ல குத்துச் சண்டை வீரனாக மாற்றவதோடல்லாமல் நல்லவனாகவும் மாற்றிவிடுகிறார். பின்னர் நடந்தது என்ன ? ரவுடிகளுக்கும் ஹீரோவுக்குமிடையே நடந்தது என்ன மாதிரியான சண்டை என்பது தான் மீதிப் படமாம்.