முக்கோணக் காதல்கதைகளில் ஒரு மாறுபட்ட கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதையுடன் வந்திருக்கும் படம் ஹார்ட்டின்.

நாயகி இமயாவுக்கு நாயகன் சனத் மீது காதல்.சனத்துக்கோ இன்னொரு நாயகி மடானோ செபாஸ்டியன் மீது காதல்.அதேநேரம் அந்தக்காதலில் பிரிவு நேருகிறது.

அதனால்,இமயாவை காதலிக்கத் தொடங்குகிறார் சனத்.அந்தநேரம் அவருக்கு ஒரு விபத்து நேர்ந்து குறிப்பிட்ட கால நினைவுகளை இழக்கிறார்.

அதனால் பழைய காதலியைத் தேடிப்போகிறார்.உடன் புதுக்காதலியும் போகிறார்.அதன்பின் என்றவெல்லாம் நடக்கின்றன என்பதுதான் படம்.

நாயகனுக்கு,இரண்டு நாயகிகள் இரண்டுவிதமான காதல்களை செய்யும் வேடம்.எனவே நாயகன் சனத்,உற்சாகமாக நடித்திருக்கிறார்.கலகலப்பு,உற்சாகம்,சோகம் ஆகிய எல்லா உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தக்கூடிய வேடமேற்று சரியாகச் செய்திருக்கிறார்.

அறிமுக நாயகி இமயாவுக்கு முதல்படத்திலேயே கனமான வேடம் அமைந்திருக்கிறது.அனுபவ நடிகைபோல் நடித்திருக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

மடானோ செபஸ்டியனுக்கு எதார்தத்துக்கும் உணர்வுப்பூர்வத்துக்கும் இடையே சிக்கித் தவிக்கும் வேடம்.நன்றாக நடித்து நல் வரவேற்புப் பெறுகிறார்.

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் வாட்ஸ்-அப் மணி குணச்சித்திர வேடத்துடன் நகைச்சுவையாகவும் நடித்திருக்கிறார்.அங்கங்கே சிரிக்க வைக்கிறார். அவரது மனைவியாக நடித்திருக்கும் டெப்னிதாவும் நன்று.

ஒளிப்பதிவாளர் முகேஸ்வரன்.வி, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டி ஆகிய மாறுபட்ட களங்கள் அமைந்ததால் உற்சாகமாகப் பணியாற்றியிருக்கிறார்.அதனால் காட்சிகள் இதமாக அமைந்திருக்கின்றன.

ராஜேஸ் முருகேசனின் இசையில் மெல்லிசைப் பாடல்கள் எல்லாம் நல்லிசைப் பாடல்களாக அமைந்திருக்கின்றன.பின்னணி இசையும் காதல் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

படத்தொகுப்பு செய்திருக்கும் பரத்விக்ரமன்,கொஞ்சம் பிசகினாலும் குழப்பம் ஏற்படுத்திவிடக் கூடிய திரைக்கதையை எந்தக் குழப்பமும் இல்லாத வகையில் கொடுத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் கிஷோர்குமார்.இளைஞர்களை ஈர்க்கக்கூடிய கதையை எடுத்துக்கொண்டு எல்லோரையும் இணைக்கக்கூடிய திரைக்கதை அமைத்து சுவைபட காட்சிகளை அமைத்து எந்தக் காதல் வெற்றிபெறும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் படத்தைக் கொடுத்திருக்கிறார்.

இதயம் தொடும் படம்.

– இளையவன்

YouTube player

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.