செல்ல அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கட்டா குஸ்தி.

இதில் ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடிக்க கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முதல் பாகம் வெற்றியடைய இப்போது 2ம் பாகம் படு மாஸாக தயாராகி வெளியாகியுள்ளது.

செல்ல அய்யாவு இயக்க விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்க ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

படத்தை ஐசரி கணேஷ் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து தயாரித்துள்ளனர்.

 

கடந்த ஜுலை 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படத்திற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. படம் மொத்தமாக ரூ. 28 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியிருப்பதாக தகவல் வந்துள்ளன.

படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு புதிய BMW காரை பரிசாக கொடுத்துள்ளார்.

https://www.instagram.com/reels/Dakd9xJpWGK/

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.