ராமராஜன், கனகா நடித்து இளையராஜாவின் இசையில் கங்கை அமரன் இயக்கத்தில் 1989ல் வெளிவந்த கரகாட்டக்காரன். ஜனரஞ்சகமான முறையில் எடுக்கப்பட்ட படம் சுமார் ஒரு வருடம் தியேட்டர்களில் ஓடிய வெற்றிப்படம்.
தற்போது கரகாட்டத்தைக் கையில் எடுத்திருப்பவர் இயக்குனர் பாலா. தஞ்சைப் பக்கம் இன்னும் கரகாட்டத்தை பரம்பரைத் தொழிலாக செய்துவரும் கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களை வைத்து கரகாட்டத்தின் பாரம்பரியம் சம்பந்தமாக தகவல்களை சேகரித்து வருகிறார் பாலா.
இப்படத்திற்காக இளையராஜாவுடன் மீண்டும் இணைந்துள்ளார் பாலா. முதல் கட்டமாக படத்திற்கான 12 பாடல்களை ஆறே நாட்களில் பதிவு செய்துவிட்டாராம் இளையராஜா. பாடலாசிரியர்களை அமர்த்தாமல் பாடல் வரிகளுக்கு பெரும்பாலும் பாரம்பரிய கரகாட்டப் பாடல்களையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்ரேயா கரகாட்டம் ஆடும் கதாநாயகியாக நடிக்கிறார். இதற்காக கரகாட்டத்தில் பயிற்சி எடுத்துக் கொள்ளவிருக்கிறாராம் ஸ்ரேயா. படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய இருப்பவர் செழியன்.
பாலாமாரே இப்போதாவது நிஜவரலாற்றைத் திரிக்காமல் கதையெடுத்து கரகாட்டக் கலைக்கு மீண்டும் புத்துயிர் கொடுங்கள்.