பேருந்தில் ஏற்படும் காதல்களை மையமாகக் கொண்டு மதுரை டு தேனியில் ஆரம்பித்து லேட்டஸ்ட்டாக பஞ்சரான ஜன்னலோரம் வரை நிறைய படங்கள் இதுவரை வந்திருக்கின்றன.
அதில் இன்னுமிரு படங்கள் சேர்கின்றன. மதுரைப் பக்கமுள்ள கிராமத்திலிருந்து மதுரை நகரத்துக்குச் செல்லும் மினி பஸ்ஸை மையமாகக் கொண்டு ரெடியாகும் படம் ‘பட்டைய கெளப்பனும் பாண்டியா’. மினிபஸ் டிரைவர் விமலுக்கும் அதில் தினமும் செல்லும் மனீஷாவுக்கும் ஏற்படும் காதலையும் அதில் ஏற்படும் பிரச்சனைகளையும் காமெடியாகச் சொல்கிறது இந்தப் பாண்டியா.
மனீஷாவின் பாத்திரத்திற்கு முதலில் பிந்து மாதவி, ஓவியா, அனன்யா, சுனைனா ஆகியோரை அனுகி அவர்கள் சம்பளத்துக்கு ஓப்புக்கொள்ளாமல் கடைசியில் சம்பளத்தை பாதியாகக் குறைத்து வாங்கிக்கொள்ள சம்மதித்த மனீஷாவை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.
அதுபோல மறைந்த இயக்குனர் ராசு மதுரவன் கடைசியாக இயக்கிய படம் ‘சொகுசுப் பேருந்து’. இப்படம் தினமும் பஸ்ஸில் ஒன்றாகச் செல்லும் ஜானி, யுவன், லியா மற்றும் லீமா ஆகியோரின் காதல்களைப் பற்றியது.