போன சட்டசபை தேர்தலில் அம்மாவுடன் ஜோடி சேர்ந்த விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்போய் அம்மாவின் கோபத்தீ பார்வையில் பட்டதில் திரையுலகிலிருந்து கழட்டிவிடப்பட்ட வடிவேலு தெனாலிராமனின் மூலம் மீண்டும் திரையுலகில் நுழைந்துவிட்டார். இம்முறை விஜயகாந்த் அம்மாவுக்கே
எதிராக நின்றபோதிலும் வடிவேலு அரசியல் பக்கமே கும்பிடுபோட்டுவிட்டு அமைதியாக இருந்துகொண்டார்,
தெனாலிராமன் பெரிய ஹிட்டாக இல்லாவிட்டாலும் சுமாராக லாபம் கொடுத்ததால் பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அவரை அனுகத் தொடங்கியுள்ளனர். பாலிவுட்டில் பிரபல இயக்குனராகிவிட்ட பிரபுதேவா ஒரு சிறிய இடைவெளி வேண்டி தற்போது தமிழில் ஒரு படம் இயக்கவிருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருக்கும் அந்தப் படத்தில் பிரதான நகைச்சுவைப் பாத்திரத்தில் வடிவேலு நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம். சபாஷ்.. வந்துட்டான்யா மூன்றாம் புலிகேசி.