‘திருமணம் என்னும் நிக்காஹ்’ படம் தயாராகி வெளிவர இருக்கும் நிலையில் படத்தின் தலைப்பைப் பார்த்துவிட்டே இஸ்லாமிய மதத்தை படம் புண்படுத்துவதாக ஆளாளுக்கு கொளுத்திப்போட்டு விட்டதில் அது பற்றிக்கொண்டு விட்டது.
இப்போது இஸ்லாம் மதபோதகர் ஒருவர் தி.எ.நிக்காஹில் பொதுவான நோக்கில் சொல்லப்பட்ட ஒரு விஷயத்தைப் பிடித்துக் கொண்டு வழக்குப் போடும் அளவுக்குப் போயிருக்கிறாராம். தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அவரிடம் பேசி முழுப்படத்தையும் காட்டி இது ‘விஸ்வரூபம்’ டைப் படம் இல்லை, ஒரு எளிய காதல் படம் தான் என்று விளக்குவதற்குள் படாத பாடு பட்டுவிட்டார்களாம்.
இது ஒருபக்கம் இருக்க படம் இந்த மாதம் ரிலீஸாகவிருந்ததை இப்போது மீண்டும் ஒத்திவைத்துவிட்டார்களாம். காரணம் இது ரமலான் மாதம் என்பதால். இந்த நோன்பு மாதத்தில் வெளியிட வேண்டாம்.; வேண்டுமானால் ரம்ஜான் அன்றோ அல்லது அடுத்த நாளோ வெளியிடலாம் என்று தயாரிப்பாளரும், இயக்குனர் அனிஸ்ஸூம் சென்ட்டிமென்ட்டாக நினைத்ததால் இந்த ஒத்திவைப்பு என்கிறார்கள்.