இது நம்ம ஆளுவில் சிம்புவின் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்கள். சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தர் தனது மகனுக்காக தயாரிக்கும் படம் இது. இப்படத்தில் ஒரு முக்கியமான சிறுபாத்திரத்தில் நடிகை டாப்ஸி நடிப்பதற்காக ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிக்க ஒப்பந்தமானதோடு ஒரு நிபந்தனையும் விதித்தாராம் டாப்ஸி. அதாவது படத்தில் நயன்தாராவும் இருப்பதால் அவருடன் எந்தக் காட்சியிலும் இணைந்து நடிக்கமுடியாது என்பதுதான் அந்தக் கண்டிஷன். காரணம் என்ன?
தெலுங்கில் நயன்தாரா டாப்பில் இருக்கும்போது டாப்ஸி அறிமுகமானார். வரிசையாக வெற்றிப் படங்களாக அமைந்தன. இந்நிலையில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது டாப்ஸியின் நடிப்பு பற்றி கேட்டபோது யார் அவர் ? என்று கேட்டாராம் நயன். அப்போது இருவருமிடையே ஏற்பட்ட பனிப்போர் தொடர்ந்து நீடிக்கிறதாம். அதன் விளைவே டாப்ஸி போடும் இந்தக் கண்டிஷன்.
போட்டோவில் இவர்களிருவரும் கொடுக்கும் போஸைப் பார்த்தால் அக்கா தங்கையும் மாதிரி இருக்கிறது. என்ன சண்டையோ ?