ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் லைவ் டி.வி. கவரேஜ் செய்து அமெரிக்கா கொன்ற நிகழ்ச்சியை வைத்து கேத்ரீன் பிக்காலோ என்னும் அம்மணி படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக சதாம் ஹூசேனைச் சுற்றி வளைத்த சார்ஜென்ட்
மேட்டாக்ஸ் என்கிற அமெரிக்கப் போர்வீரரின் ‘நிஜ’க் கதை படமாகிறது.
இது மாதிரி அக்கிரமங்களை துணிந்து செய்வதும் பின்பு அவற்றையே ஆவணப் பட ரீதியில் திரைப்படமாக எடுத்து வெளியிட்டு தாங்கள் செய்தது சரிதான் என்பதை மக்கள் மனத்தில் மறைமுகமாக பதிய வைப்பதும் மேற்கத்திய வல்லரசுகளின் அரசியல் உத்திகளில் ஒன்று. துட்டும் சம்பாதித்து விடுவார்கள்.
நம் ஊர் அம்பிகள் தான் ச்சே என்னமா எடுத்துருக்கான் பாரு.. கேமரா..லொகேஷன் .. அட.. அட.. என்று வாய் பிளந்துகொண்டே பார்த்து விடுகிறார்களே..
ப்ளாக் லிஸ்ட் நம்பர் ஒன் (Black List #1) என்கிற ஆங்கில நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது இப்படம்.
இப்படத்தில் மேடாக்ஸ் எவ்வாறு தீவிரவாதிகளை ‘விசாரித்தான்’ என்பதில் ஆரம்பித்து எப்படியெல்லாம் திட்டங்கள் தீட்டி சதாம் ஹூசேனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தான் என்பதை த்ரில்லும் ‘தத்துவமும் கலந்து’ கொடுத்திருக்கிறார்கள்.
இதில் மேடாக்ஸாக நடிக்க இருப்பவர் ராபர்ட் பேட்டின்ஸ்.
அடுத்த வருடம் ஒசாமா பின்லேடனின் வேட்டையும் (லிங்குவின் ‘வேட்டை’ இல்லீங்க..) அதற்கடுத்த வருடம் சதாமின் வேட்டையும் ஆஸ்காரு வாங்கும் என்று சொடலை மாடன் குடுகுடுப்பை நேத்து ராத்திரியே வந்து கனவில் சொல்லி விட்டான்.