குழந்தைகள் முதல் கொள்ளுத்தாத்தாக்கள் வரை அனைவராலும் ரசித்து கொண்டாடப்படுகிற ஒரே நட்சத்திரம் ஜாக்கி சான் தான்.
தனது அதிரடி மற்றும் காமெடி ஆக்ஷன்களால் மக்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கும் ஜாக்கி சான், சமீபத்தில் தனது ரிடையர்மெண்ட் குறித்து வரும் செய்திகளை அவ்வளவாக ரசிக்க முடியவில்லை என்று வருந்துகிறார்.
இதுகுறித்து தனது சொந்த வெப் சைட்டில்,’’ நேற்று நடந்த பிரஸ்மீட் ஒன்றில், நான் இப்போது நடித்து வரும்
‘சைனிஷ் ஜோடியாக் ’[ ஆர்மர் ஆஃப் காட்’ பட்த்தின் மூன்றாம் பார்ட் ] தான் நான் நடிக்கிற படங்களிலேயே கடைசி மாபெரும் அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என்று சொன்னேன்.
தூங்கி எழுந்து பேப்பர் படித்தால், ஜாக்கியின் கடைசிப்படம் என்று போடுகிறார்கள். வயதாவதால் அடிதடிப் படங்களை குறைத்துக்கொண்டு ‘த கராத்தே கிட்’ போன்ற படங்களில் மட்டுமே நடிக்கப்போகிறேன் என்று சொன்னால் எப்படி திரித்து எழுதுகிறார்கள் பாருங்கள்.
.‘இப்போது இந்த உலகம் முழுக்க வன்முறையால் நிரம்பி வழிகிறது. இது எனக்கு மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. எனக்கு படங்களில் சண்டை போடப்பிடிக்குமே ஒழிய வன்முறை ஒருபோதும் பிடிக்காது’’ என்று குறிப்பிடும் ஜாக்கி இனி சில ஹாலிவுட் படங்களில் நடிக்கும் உத்தேசத்துடன்,’நல்ல இங்கிலீஸ் பேசுவது எப்படி? என்று கற்றுக்கொள்ள ஒரு வாத்தியார் வைத்துக்கொள்ளப் போகிறாராம்.
நல்ல இங்கிலீஸ் கற்றுக்கொள்ள விரும்பும் ஜாக்கிப்பையனின் வயது ஜஸ்ட் 57 தான்.
[ஆமா நீங்க ஒரு தமிழ்ப்படத்துல நடிக்கப்போறதா இங்க ஒரு புரடியூஸர் பத்து வருஷமா புருடா வுட்டுக்கிட்டு இருக்கார். அதைப்பத்தியெல்லாம் உங்க வெப்சைட்ல எழுத மாட்டீங்களா ஜாக்கி ?]