இன்று காலையிலிருந்தே திரிஷாவின் திருமணச்செய்தி குறித்த வதந்திகள் இணையத்தில் ’அவரா செய்தார் ,…இருக்காது… அப்படி எதுவும் நடக்காது… நம்ப முடியவில்லை.. வில்லை ,,…வில்லை’ என்கிற ரீதியில் சகட்டுமேனிக்கு வந்த வண்ணம் இருக்க, அவரது விசிறிகள் பாவம் வேர்த்துத்தான் போனார்கள்.

இதயத்தை பத்திரமாக கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள் செய்தி உண்மைதான். இனி வாழ்நாள் முழுக்க நிரந்தரமாகவே ‘வாயை மூடிப்பேச முடிவெடுத்த ‘வாயை மூடிப்பேசவும்’ தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திரிஷாவுக்கும் விரைவில் நடைபெற இருக்கும் திருமணத்துக்கு நேற்றே ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாம்.

வெகுவிரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து தனது திருமண தேதியை அறிவிக்க இருக்கிறாராம் அக்கா.

இனிமே த்ரிஷா இல்லேன்னா திவ்யான்னு யாரும் ஆறுதல் சொல்லிக்கமுடியாது. ரொம்ப ஸ்ட்ரிக்டா சொல்லிட்டோம் த்ரிஷா இல்லவே இல்ல.

பி.கு; நேற்று இரவு மேற்படி செய்தியை திரிஷாவும் அவரது மம்மியும் மாறி மாறி மறுக்கிறார்கள். ‘மாப்ள அவருதான்… ஆனா அவரு போட்டுருக்க ட்ரெஸ் என்னோடது…..

Related Images: