காலண்டரில் எத்தனை தேதிகள் இருக்கிறதோ அத்தனை தேதிகளுக்கும் தனது ‘ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை’ டிவிடி ரிலீஸை தள்ளிவைத்து வந்த சேரன் தற்போது மீண்டும் ஜனவரி 30 என்ற தேதியிலிருந்து பிப்ரவரி 15க்கு தாவியிருக்கிறார்.

இந்த முறை அவருக்கு கிடைத்திருக்கும் இன்னொரு சப்பாணி காரணம் தயாரிப்பாளர் சங்க ஆதரவு கிடைத்திருக்கிறது என்பது. தனது ’சி2ஹெச்’ சங்க ஆட்கள் சிலருடன் புதிய தயாரிப்பாளர் சங்கத்தலைவர் தாணுவுக்கு மாலை அணிவித்து விட்டுத்திரும்பிய சேரன், ‘இனிமே எங்க சங்கத்து ஆளுங்களை யாரும் அடிக்க முடியாது. தாணு சப்போர்ட் இருக்கு. அதனால பெருசா ஃபங்சன் பண்ணி டிவிடி ரிலீஸ் பண்ணப்போறோம்’ என்கிறார்.

தாமதத்துக்கும், இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணம் சேரனின் மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை என்கிற டிவிடி ரிலீஸாகிற அதே நாளில் சிலபல தியேட்டர்களும் கிடைத்துவிடாத என்கிற நப்பாசைதான்.

அதற்கு வாய்ப்பே இல்லை என்கிற கசப்பான உண்மையை தெரிந்து கொள்ள சேரன் இந்த ஆண்டு காலண்டரில் ஒரு பத்து புதிய தேதிகளையாவது சந்திக்க நேரிடும்.

சேரன் என்னும் இயக்குநரின் கேளிக்கை. சரி இன்னும் கொஞ்சநாளைக்கு பார்ப்போம் வேடிக்கை.

Related Images: