உலக நாயகன் கமல் ஒரு ஹாலிவுட் படத்தை இயக்கி, நடிக்கப்போகிறாரமே? ரமேஷ், திண்டுக்கல்.
கமல் போன்ற உலக நாயகன்கள் கூட ஹாலிவுட் படம் இயக்குவது, ஏதோ ஒரு பெருமையடிக்கும் விசயம் என்று நினைப்பதை நினைக்கும்போது,
அவர் மீது பரிதாபப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.
அதுவும் போக, எனக்கு இது ‘விஸ்வரூபம்’ வியாபாரத்தை விஸ்தரிக்க அடிக்கும் ஸ்டண்ட் போலவே தோணுகிறது.
கைவசம் படங்களே இல்லாவிட்டாலும், எப்போதும் பரபரப்பாக செய்திகளில் அடிபட்டுக்கொண்டேயிருக்கிறாரே, லட்சுமி ராய்”? கணேசன், ராமநாதபுரம்.
லட்சுமி ராய்க்கு வாய்க்கொழுப்பு கொஞ்சம் ஜாஸ்தி. தன்னைப்பற்றிய செய்திகளை வரவழைக்கும் சாமர்த்தியமும் ஜாஸ்தி.
உதாரணம் லண்டனில் நடக்கும் ‘தாண்டவம்’ படப்பிடிப்புக்கு லட்சுமி ராய் சென்றவுடன், அமலா பால் விஜய் மேட்டர் அவுட். மாதம் 5 லட்ச ரூபாய்க்கு பில் வைத்த விரமின் நண்பர்கள் மேட்டர் அவுட்.
ஒரு சின்ன ரூம் மேட்டர் – விக்ரமுக்கு பக்கத்து ரூம் போட்டுத்தரவில்லை என்ற ஒரே காரணத்துக்காக, படப்பிடிப்பையே நிறுத்தி, அழிச்சாட்டியம் பண்ணி அனைத்து பத்திரிகைகளிலும் இடம் பிடித்துவிட்டார் லட்சுமி ராய்.
90 சதவிகித படங்கள் ஓடுவதில்லை என்கிறீர்கள். ஆனால் படத்தயாரிப்பு கொஞ்சமும் குறைந்தபாடாய் இல்லையே ? குமார ராஜா, பொள்ளாச்சி.
இப்போதெல்லாம் தயாரிப்பாளர்கள் படம் எடுப்பதில்லை.ரியல் எஸ்ட்டேட்டில் சம்பாதித்தவர்கள், கதாநாயகனின் தந்தையர்கள், வேறு சில நோக்கங்களுக்காக படம் எடுப்பவர்கள் தான் அதிகம் வருகிறார்கள்.
பிரபுதேவாவின்,’ரவுடி ரத்தோர்’ பார்த்தீரா கிளியாரே? விஸ்வநாதன், மேலூர்.
ஒரே படத்தை தெலுங்கில், தமிழில், இந்தியில் என்று மாற்றி மாற்றி எடுப்பீர்கள்.அந்த சனியன்கள் எல்லாவற்றையும் பார்த்துத் தொலைக்க வேண்டுமா?
ஆனால் படம் இந்தியில் சூப்பர்டூப்பர் ஹிட்டாம். அடுத்த சில ஆண்டுகளுக்கு பிரபுதேவாவை சென்னைப்பக்கம் பார்க்க வாய்ப்பில்லை என்கிற அளவுக்கு, நடிகர்களும், தயாரிப்பாளர்களும் கியூவில் நிற்கிறார்களாம்.
நயன் தாராவின் சாபம் ரிவர்ஸ் எஃபெக்டில் வேலை செய்கிறதோ?
ஒருவேளை ‘முரட்டுக்காளை’ வெற்றிபெற்றால் சுந்தர்.சி தொடர்ந்து நடிப்பாரா, கிளிப்பயபுள்ள?- விநாயகம்,பெருங்களத்தூர்.
தொடர்ந்து நடிப்பதா,அல்லது டைரக்ஷனா என்பது குறித்து சுந்தர்.சி சொந்தமாக எந்தவித முடிவையும் எடுப்பதில்லை.அது உங்கள் விதி எவ்வளவு வலியது என்பதைப் பொறுத்தது.
முன்பு நடித்தது போதும் என்று நீங்கள் பொங்கி எழுந்தபோது, இனி ஒன்லி டைரக்ஷன் தான் என்று முடிவெடுத்தார். இந்த ‘முரட்டுக்காளை’ நீங்கள் பொங்கி எழுமுன், அதாவது சுமார் நான்கு வருடங்களுக்கு முன் பூஜை போடப்பட்ட படம்.
கிளியாரிடம் ஈமெயிலில் கேள்விகளை கேட்க [email protected] க்கு கேள்விகளை அனுப்புங்கள்..