richa news

படங்களுக்கு அழகான தமிழ்ப்பெயர்கள் சூட்டுவதில், இன்றைக்கு இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனனை அடித்துக்கொள்ள ஆளில்லை. அடுத்து தனது நிறுவனத்தயாரிப்பில், உதவியாளர் ப்ரேம் சாய் இயக்கும் படத்துக்கு கவுதம் சூட்டியிருக்கும் பெயர் ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’.

ஜெய் ஹீரோவாக நடிக்க,அவருடன் ‘நாடோடிகள்’ அபிநயா ஜோடி சேருவதாக இருந்த அந்தப்படத்தில் இப்போது ஒரு சிறிய மாற்றம். ஏற்கனவே வாங்கி வைத்திருந்த தேதிகளை முறையாக பயன்படுத்தவில்லை என்று அபிநயா

படத்திலிருந்து ஒதுங்கிக்கொள்ள, அதற்குப்பதிலாக ‘மயக்கம் என்ன ‘ ஒஸ்தி’ படங்களின் நாயகி ரிச்சா கங்கொபாத்தியாய கமிட் பண்ணப்பட்டுள்ளார்.

தமிழில் நிறைய கதைகள் கேட்டு தெனாவெட்டாக அத்தனையையும் நிராகரித்து, ஒரு கட்டத்தில் படங்கள் இன்றி ரிச்சா காய்ந்து கிடப்பதை அறிந்துகொண்ட கவுதம், அவரை கமிட் பண்ணப்போவதை, ரிச்சாவிடம் பேச்சுவார்த்தை நடத்தாமலே தனது ட்விட்டர் மூலம் அறிவித்தார்.

அதைப்படித்து பூரித்துப்போன ரிச்சா, ‘தற்போது கவுதம் லண்டனில் இருப்பதால்தான் என்னிடம் பேசாமலே கூட, நான் நடிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். தமிழில் அடுத்து ஒரு நல்ல புராஜக்டில்தான் கமிட் ஆகவேண்டும் என்ற என் காத்திருப்பு வீண்போகவில்லை’’ என்கிறார்.

இதற்கிடையில், ’ஜெய் ரொம்பப்பொடியன். அவருக்கு ஜோடியாக ரிச்சாவைப்போட்டால், அவரது ஆண்ட்டி மாதிரியே காட்சி அளிப்பார் ‘என்கிற கருத்துக்களுடன், ஒரு சிலர், ரிச்சாவுக்கு கிடைத்திருக்கும் ஒரே வாய்ப்புடன் பாண்டி ஆட ஆரம்பித்திருக்கிறார்களாம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.