தமிழிலிருந்து தெலுங்குக்குத்தாவி, தெலுங்கிலிருந்து இந்திக்குத்தாவி, அடுத்து தாவ ஏரியா எதுவும் கிடைக்காமல் வீட்டில் சும்மா ஃப்ரியா தவித்துக்கொண்டிருந்த ப்ரியாமணிக்கு, வாராது வந்த மாமணியாய் மாட்டியிருக்கும் கன்னடப்படம் ‘சாருலதா’.
2007-ம் ஆண்டு தாய் [லாந்து] மொழியில் வெளியான ‘அலோன்’ படத்தின் அப்பட்டமான காப்பி ‘சாருலதா’. சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றில் பங்குபெற்று பல விருதுகளை அள்ளிய ‘அலோன்’ ,இரட்டையராக நடித்த
நாயகிக்கும் பல சர்வதேச விருதுகளைப்பெற்றுத் தந்தது. அந்தப்பட டி.வி.டி.யை நூற்றுக்கும் மேற்பட்ட முறை பார்த்து, ’சாருலதா’ வில் நடித்திருப்பதன் மூலம், தனக்கு மீண்டும் ஒருமுறை தேசிய விருது கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறாராம் ப்ரியாமணி.
‘’ இடையில் நானே எதிர்பாராமல் ஒரு பெரிய கேப் விழுந்துவிட்டது. அந்த நேரத்தில்தான் ‘சாருலதா’ சப்ஜெக்டோடு டைரக்டர் பி.குமார் என்னைத்தேடி வந்தார். கதை ஒரு வெளிநாட்டுப் படத்தின் தழுவல்தான் என்றாலும், குமார் தனது ஸ்கிரிப்டில் சில நல்ல மாறுதல்களை செய்திருக்கிறார். இதுவரை நான் நடித்த படங்களிலேயே சிறந்த படம், கடுமையான உழைப்பு தேவைப்பட்ட படம் என்று சாருலதாவைச்சொல்வேன்.’’ என்கிற ப்ரியாமணி தமிழிலும் இந்தப்படம் ரிலீஸாகிறது என்கிறார்.
இதுவரை இரட்டையர்களைப் பற்றி எவ்வளவோ படங்கள் வந்திருந்தாலும், ஒட்டிப்பிறந்த ரெட்டையர்களைப் பற்றிய முதல் படம் இதுவே என்பதால், ‘அலோன்’ பட டி.வி.டி.யை கன்னடப்பட டைரக்டர் பி. குமார் கொடுத்த தினத்திலிருந்தே தேசிய விருது கனவில் கொஞ்சம் ஓவராகவே மிதக்க ஆரம்பித்துவிட்டராம் ப்ரியா.
சரி விருது ஓ.கே. அதை இரட்டையரில் யாருக்கு எதிர்பார்க்குறீங்க, சாருவுக்கா, லதாவுக்கா? ப்ரியாவுக்கா, மணிக்கா?