யாரும் எதிர்பாராதவகையில் திடீரென்று ‘பில்லா2’ ஒருவாரம் தள்ளிப்போக தனிக்காட்டு ராஜாவாக வரும் வெள்ளியன்று வருகிறது கார்த்தியின்’சகுனி’.
டைட்டிலுக்கு அர்த்தம் தெரிந்துதான் வைத்தார்களோ என்ற சந்தேகம் படத்தின் வில்லன் பிரகாஷ்ராஜுக்கு, வந்த்தோ என்னவோ, கடந்த வாரம் மொத்த டீமும் அதிரும்படி ஒரு சகுனியாட்டம் ஆடிக்காட்டிவிட்டார்.
ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்கோடு வந்தால்தான் கதை விளங்கும்.
‘சகுனி’யில் பிரகாஷ்ராஜ் இப்போது நடித்திருக்கும் பாத்திரத்தில், ஆரம்பத்தில் நடித்தவர் இந்தி நடிகரான சலீம் கவுஸ். இவரது யதார்த்த நடிப்பு தமிழில் எடுபடாது என்று முக்கால்வாசி படம் முடிந்த நிலையில் அவரை மாற்றிவிட்டு அவசர அவசரமாக பிரகாஷ்ராஜை கமிட் பண்ணுகிறார்கள்.
வில்லனாக நடிப்பதற்கு பிரகாஷ்ராஜ் ஒரு படத்துக்கு 40லிருந்து 50 லட்சம் வரை கேட்பார். ஒரு பத்து இருபது முன்னப்பின்ன கேட்டாலும் தந்துவிடலாம் என்ற நினைப்பில் அப்போது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பிரகாஷிடம் சம்பளம் பேசாமல் விட்டுவிட்டார். அதுவுமில்லாமல் தனது சொந்தப்பட ரிலீஸ் தொடர்பாக ஞானவேலிடம் ரூ ஒரு கோடி கடனும் வாங்கியிருந்தார் பிரகாஷ்ராஜ்
.
நிலைமை இப்படியிருக்க, ‘சகுனி’ படத்தின் டப்பிங் பேச அழைத்தபோது சண்டிமாடாக,வராமல் வம்பு பண்ணிக்கொண்டே இருந்தாராம்.
ரிலீஸ் தேதி நெருங்கும்வேளையில் விரட்டிப்பிடித்து விசாரித்தபோது, ‘’ நீங்க ரெண்டு லாங்க்வேஜ்ல அதிரடியா பிசினஸ் பண்றதுக்கு இந்த பிரகாஷ் வேணும். ஆனா அவனுக்கு என்ன சம்பளம் தரனும்னு உங்களுக்கு தெரியாதா? உங்க பழைய கடன் ஒரு கோடியை கழிச்சிட்டு, இன்னும் ஒரு கோடி குடுத்தாதான் டப்பிங்கே பேசுவேன்’’ என்று கறாராக சொல்லிவிட்டாராம்.
பிரகாஷ்ராஜிடமிருந்து இப்படி ஒரு அழுகுனி ஆட்டத்தை எதிர்பாராத சூர்யா, கார்த்தி,ஞானவேல் கோஷ்டி ஒருவழியாக புலம்பித்தீர்த்து, மேலும் 50 லட்சம் மட்டும் அழுது டப்பிங் பேச வைத்தார்களாம்.
இனி தங்கள் சம்பந்தப்பட்ட படங்களில் பிரகாஷ்ராஜ் என்ற பெயரைக்கொண்ட ஜூனியர் ஆர்டிஷ்டுகளைக்கூட நடிக்கவைப்பதில்லை என்று கூட்டு சபதம் எடுத்திருக்கிறார்களாம்.