மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி , தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியனுடன் இணைந்து இந்திய மக்கள் தொகை பொருளாதாரம் மற்றும் சாதீய கணக்கெடுப்பு பற்றிய விவரங்களை வெளியிட்டார்.

அதில் பல புதிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கிராமமே நகரமாயிடுச்சி.. என்று நாம் என்ன தான் புலம்பினாலும் உண்மையில் இந்தியாவில் 73 சதவீதம் மக்கள் இன்னும் கிராமங்களில் தான் வாழ்கின்றனராம். அதில் 74.5 சதவீதம் வீடுகள்ல மாத வருமானமே ஐயாயிரம் ரூபாயைத் தாண்டாதாம். கிராமத்தில் இருக்கும் 8.3 சதவீதம் வீடுகளிலே தான் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மாத வருமானம் இருக்கிறதாம். கிராமங்களில் வாழ்பவர்கள் ஐம்பது சதவீதம் கூலியுழைப்பில் தான் வயிற்றுப் பிழைப்பு நடத்துகின்றனர். 56 சதவீதம் பேருக்கு சொந்தமாக நிலங்கள் இல்லை.

அதுபோல வெறும் 3.4 சதவீதம் தாழ்த்தப்பட்ட மக்களும், 3.3 சதவீதம் பழங்குடியினருமே இன்கம்டாக்ஸ் கட்டும் நிலையில் இருக்கிறார்களாம். 1932 க்குப் பின் தற்போது தான் மீண்டும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடைபெற்றிருக்கிறது. அது எஸ்.ஸி மற்றும் எஸ்.டி மக்களின் பின்தங்கிய நிலை 80 வருடங்களில் அப்படி ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை என்பதையே காட்டுகிறது.

இதை மனதில் வைத்து தான் நம்ம மோடிஜி டிஜிட்டல் நகர திட்டங்களை கொண்டு வந்துட்டாரோ.. என்னமோ.  சோத்துக்கே அல்லாடுறவங்க எல்லாம் டிஜிட்டல் நகரத்துக்கு போய் என்ன பண்ணுவாங்க.. ?

Related Images: