கே.வி. ஆனந்தின் ‘கோ’விற்கு அப்புறம் எங்கே கோயிருந்தார் என்று அறிந்துகொள்ளமுடியாமல் இருந்த பியா பாஜ்பாய், மறுபடியும் ஒரு விவகாரமான வதந்தியுடன் கோடம்பாக்கம் வந்து சேர்ந்திருக்கிறார்.
‘கோவா’ படத்தில் சேர்ந்து நடித்தபோதே கிசுகிசுக்கப்பட்ட ஜோடிதான் பிரேம்ஜி அமரனும் பியாவும். ஆனால் இந்தமுறை வந்த கிசுகிசு சற்று வலுவானது. பிரேம்ஜியும், பியாவும் தாலிகட்டிக்கொள்ளாமலேயே, ‘லிவிங் டுகெதராக’ வாழ்வதாகவும், இப்போது அந்தக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டு, அவர்களை மீண்டும் இணைத்து வைக்க வெங்கட் பிரபு முயற்சித்துவருவதாகவும் செய்தி.
வழக்கம்போல் இந்தச்செய்தியை மறுக்கும் பியா, ‘’ ஆக்ஷுவலா, ஏப்ரல்-1 முட்டாள்கள் தினத்தன்னிக்கு, வெங்கட் பிரபு உட்பட எல்லா நண்பர்களும் அறிய, நானும் பிரேம்ஜியும் பேசிவச்சிட்டேதான் இப்பிடி ஒரு ரூமரை கிளப்பினோம்.[ அட ஆண்டவா..] நாங்க கூடி வாழவும் இல்ல.. ஓடிப்போகவும் இல்லை. நம்புங்கப்பா ப்ளீஸ்’’ என்று கஜினி அசின் மாதிரியே காமெடி பண்ணுகிறார் பியா.
இடையில், தமிழில், ‘கோ’வுக்கு அப்புறம் ஏன் இவ்வளவு இடைவெளியாம்?
’’நடுவுல தமிழ்ல கேட்ட கதைகள் எதுவும் மனசுக்கு புடிக்கல. அதுக்காக வீட்டுல சும்மா இருக்க முடியுமா? ரெண்டு மலையாளப்படத்துல நடிச்சேன். இந்தியில ஒரு பெரிய புராஜக்ட் பேசிட்டிருக்கேன். இப்ப அதை வெளிய சொன்னா, நாளைக்கு காலைல ப்ளைட் புடிச்சிப்போய் கெடுத்துவிடுறதுக்கு எல்லாம் சில ஆளுங்க இருக்காங்கங்கிறதால அப்புறமா சொல்றேன்.
இதுபோக’சட்டம் ஒரு இருட்டறை’ ’தளம்’ன்னு ஒரு தமிழ், தெலுங்கு தயாரிப்புல அக்மார்க் பிராமணப்பொண்ணா நடிக்கிறேன்’. என்கிற பியா மிக விரைவிலேயே ஒரு படம் இயக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம்.
பியாவை வைத்துக்கொண்டு, தயாரிக்கும் எண்ணமுள்ளவர்கள் தாராளமாக அணுகலாம், ஏதொன்றுக்கும் பிரேம்ஜியின் அனுமதியை பெற்றுக்கொண்டு.