சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு தங்கள் படங்களை எடுத்துச்செல்பவர்கள், அடுத்த ஒரு ஆண்டு மட்டும் ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி,அக்கறையோடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஏனெனினில் நடிகை சோனா அக்கா தனது சொந்தக்கதையை, சர்வதேச படவிழாக்களை முக்கிய குறியாக வைத்துதான், தயாரிக்கவே முடிவெடுத்திருக்கிறாராம்.
பிரபலங்களில் ஒரு சிலருக்கு, தன் பெயர் எப்போதும் பத்திரிகை செய்திகளில் அடிபட்டுக்கொண்டேயிருக்க வேண்டும் என்கிற வியாதி உண்டு. சமீபத்தில், அந்த வியாதிக்கு அதிகம் ஆட்பட்டு, நோய் முற்றிவிடும் நிலைக்கு வந்திருக்கிறார் கவர்ச்சி நடிகை சோனாக்கா.
தனது சுயசரிதையை, வெளிநாட்டு நண்பர் ஒருவருடன் இணைந்து படமாக்கப்போவதாக சொல்லிவரும் சோனா, அந்தப்படம் பற்றி, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது கதைகளை கிளப்பிவிட்டுக்கொண்டு வருகிறார்.
‘’எனது ஆட்டோகிராபை முதலில் தமிழில்தான் படமாக எடுப்பதாக இருந்தேன். என் கதையில் செக்ஸ் காட்சிகள் நிறைய இருக்கும். அதை லோக்கல் சென்சார் அதிகாரிகள் கத்தரித்து நடந்த உண்மைகளை ஊருக்குத்தெரியவிடாமல் பண்ணி விடுவார்கள் என்று யோசித்ததன் விளைவாக படத்தை இப்போது ஆங்கிலத்தில்தான் எடுப்பது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
தமிழ் ரசிகர்களுக்கு சப்-டைட்டிலுடன் படத்தை வெளியிடுவதா,அல்லது தமிழில் டப் பண்ணூவதா என்பதை பின்னர்தான் முடிவு செய்யவேண்டும்.
ஒரு சிலர் சிலுக்கின் ‘டர்ட்டி பிக்ஷர்’ போல என் கதை இருக்குமா என்று கேட்கிறார்கள்.அப்படி ஒப்பிட முடியாது. சிலுக்கு காமவெறியர்களுக்கெதிராக போராடாமல் அடங்கிப்போன பெண். நானோ அவர்களோடு எப்போதும் போராடி, பின்னர் தோற்று அடங்கிப்போனவள்’’ என்கிற சோனா, விரைவிலேயே படத்தின் இயக்குனர் உட்பட்ட டெக்னீஷியன்களையும் ,சக நடிகர்களையும் தேர்வு செய்து படப்பிடிப்பு கிளம்பவிருக்கிறாராம்.
மேடம், படம் உங்க ஆட்டோகிராப்’ங்குறீங்க. சர்வநாச …ச்சீ…ஸாரி.. சர்வதேசப்படவிழாவுக்குப் போகணும்ங்குறீங்க.. டைரக்டர் இன்னும் முடிவு பண்ணலைங்குறீங்க. ஏதோ நம்மளால முடிஞ்ச ஒரு ஐடியா. பேசாம நம்ம சேரன் சாரையே டைரக்டரா போட்டுட்டீங்கன்னா ஒரே கல்லுல மூனு காய் அடிச்ச மாதிரி இருக்குமே?