கடந்த மூன்று தினங்களாகவே பி.பி. எகிறி உச்சக்கட்ட டென்சனில் கொதிக்கிறார் விஸ்வரூப சிங்காரி ஆண்ட்ரியா. காரணம் புதுப்படமாட்டம் வந்த ஒரு தவறான கிசுகிசுவின் நடமாட்டம். அதை ஒட்டி கமலிடமிருந்து வந்த போன்.
பிரபல டான்ஸ் மாஸ்டர் கூல் ஜெயந்த், தானே இயக்கி, ஹீரோவாக நடிக்கும் ‘யோ யோ’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஆண்ட்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவிலேயே அதன் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும் வந்த செய்திதான் ஆண்ட்ரியாவின் ஆத்திரத்துக்கு காரணம்.
‘’ஒரு செய்திக்கு எதாவது ஒரு அஸ்திவாரம் வேண்டும். அப்படி ஒரு முகாந்திரமும் இல்லாத இதுபோன்ற கற்பனைகளை யார், எதற்காக கட்டவிழ்த்து விடுகிறார்கள் என்றே தெரியவில்லை. இப்போது இணையதளங்கள் பெருத்துப்போய்விட்டதால் செய்திகள் காற்றில் நெருப்பைப்போல் பரவுகின்றன.
இதில் இன்னும் ஒரு கொடுமையான விசயம், அந்த டான்ஸ் மாஸ்டர் கூல் ஜெயந்த் யார், அவர் கறுப்பா சிவப்பா என்பதுகூட எனக்குத்தெரியாது.[ கறுப்பா பயங்கரமா இருப்பாருங்க மேடம் ]
நான் ஏற்கனவே சொல்லியபடி, ‘விஸ்வரூபம்’ ரிலீஸுக்கு முன்பு எந்தப்படத்திலும் ஒப்பந்தமாவதாக இல்லை எனும்போது எங்கிருந்து வந்தது இந்த ‘யோ யோ’? இந்த நியூஸை முதலில் கிளப்பிவிட்டவனைப் பார்த்து போயா யோவ்’ என்று கத்த வேண்டும் போலிருக்கிறது’’ என்கிற ஆண்ட்டிரியா, கமல் உட்பட யாருக்கும் தெரியாமல் ‘பெர்சனல் புராஜக்ட்’ ஒன்றில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறாராம்
.
ஏதாவது க்ளூவாவது கொடுங்க என்றால்…ஸ்ஸ்ஸ்’ என்றபடி உதட்டுக்கு 144 போடுகிறார்.