மணிரத்னம் படத்தை விட்டு வெளியேறி பல மணி நேரங்களே ஆன நிலையில், இப்போது ஷங்கரின் ’ஐ’ [ த பொய் ] படத்திலிருந்தும் வெளியேறி, பெரும் சர்ச்சையில் மாட்டிக்கொண்டிருக்கிறார் சமந்தா.
இதற்கு இருதரப்பிலிருந்தும் வெவ்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், மெய்யான காரணம் டப்புதானாம். மணிரத்னம் படத்துக்கு சமந்தாவுக்கு 75 லட்சம் பேசியிருந்தார்கள், நாம் ஒரு கோடி கூட கொடுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் சமந்தாவிடம் சம்பளமே பேசாமல், பத்திரிகைகளுக்கு தயாரிப்பாளர் தரப்பில் செய்திகளைக்கொடுத்துவிட்டார்கள்.
விக்ரமுக்கு ’ஜோடியாக’ சமந்தா என்று வந்தவுடன், சமந்தாவை விட அதிக அதிர்ச்சி அடைந்தது இயக்குனர் கவுதம் தானாம்.
‘விக்ரமுக்கு 61 வயசு உனக்கு 21 வயசு. ஒருவேளை முதல் மரியாதை’ படத்தை ரீமேக் பண்ணப்போறங்களா? உனக்கு ஏத்த வயசுல சின்னப்பசங்களோட நடிச்சி ஒரு நாலஞ்சி வருஷத்துக்காவது நிலைச்சி நிப்பேன்னு பாத்தேன். இப்பிடி அல்ப ஆயுசுல போகணும்னு முடிவெடுத்துட்டியே. எனிவே எனது ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று நீளமாக சமந்தாவுக்கு மெஸேஜ் அனுப்பிவிட்டாராம் கவுதம்.
அதைப்படித்து நொந்துபோய், எப்பிடிடா ‘ஐ’யை விட்டு வெளியே வருவது என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில்தான், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து சம்பளம் பேசவே வந்தார்கள். வந்தவர்கள் சமந்தா சொன்ன சம்பளத்தை கேட்டு, ‘’ ஸாரி மேடம் நாங்க அட்ரஸ் மாறி சம்பந்தா சம்பந்தம் இல்லாத இடத்துக்கெல்லாம் வந்துட்டோம்’ என்றபடி பின்னங்கால் பிடறியில் பட ஓடினார்களாம். சமந்தா கேட்ட தொகை ஜஸ்ட் 5 கோடிதான்.
அத்தோடு நின்றாரா,‘’ பெரிய படம் என்றவுடன் வாயைப்பிளந்துகொண்டு வந்துவிடுவேன் என்று நினைத்துக்கொண்டு, முறையாக என்னிடம் சம்பளமும், கால்ஷீட் விபரங்களும் பேசாமல் கூட என் பெயரை அறிவித்துவிட்டார்கள். இப்போது நான் எல்லாரிடமும் கமிட் ஆகி விட்டு, உடனே பின்வாங்குவதுபோல் அநாவசியமான கெட்ட பெயர் எனக்கு’’ என்று போகிற இடங்களில் எல்லாம் புலம்பவும் ஆரம்பித்துவிட்டாராம்.
இவ்வளவு நடந்தபின் விக்ரமும் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவியும் சும்மா இருப்பார்களா?
‘’அந்தப்பொண்ணுக்கு பயங்கரமான ஸ்கின் ப்ராப்ளம் இருக்கு. ட்ரீட்மெண்ட் எடுக்குறதுக்காக, நாங்க ஷூட்டிங் கிளம்புறதா திட்டமிட்ட தேதியிலருந்து, ஒரு மாசம் தள்ளி டைம் கேட்டுச்சி. அதனாலதான் நாங்களே படத்துலருந்து தூக்கிட்டோம்’’ என்கிறார்கள்.
அடப்பாவிங்களா உங்களுக்கு பலி வாங்குறதுக்கு அந்தப்பொண்ணோட ஸ்கின்னுதான் கிடைச்சுதா?