நியூயார்க்கில் நடைபெர்ற ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றபின் நாடு திரும்பிய மைத்ரிபால சிறிசேனா நேற்று சர்வதேச விசாரணையை இலங்கை ஏற்காது. அதற்கு இலங்கையைச் சேர்ந்த கட்சிகள், மதத்தலைவர்கள் ஆகியோரிடம் கலந்தாலோசித்து பின்னர் இதுபற்றி முடிவு செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
இன்று கலந்தாலோசிக்காமலேயே தனது முடிவை மேலும் தீர்மானமாக தெரிவித்த சிறிசேனா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“உள்நாட்டுப்போர் என்ற இந்த சூழல் மீண்டும் உருவெடுத்துவிடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு தேசமாக நாம் முன்னேறிச் செல்ல வேண்டிய தேவை உள்ளது. ஐ.நா. தீர்மானம் தொடர்பான விவாதத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், சமயக் குழுவினர் பங்கேற்பர்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அரசியலமைப்புக்கு உட்பட்ட முழுக்க முழுக்க உள்நாடு சார்ந்ததாக இருக்கும். அமெரிக்க உதவியுடன், 38 நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது எனது அரசுக்கு கிடைத்திருக்கும் உத்வேகம் ஆகும்.
சர்வதேச விசாரணை என்று யாரும் எங்களை மிரட்டமுடியாது. எனது அரசு அயலுறவை மேம்படுத்தியுள்ளது. அதிபராக எனது முதல் பணி, சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்தைச் சம்பாதிப்பதாகும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் அயல்நாட்டு நீதிபதிகளை விசாரணை நடத்த இலங்கைக்குள் அனுமதிக்க இலங்கைச் சட்டத்தில் இடமில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். லட்சக் கணக்கானோரைக் கொல்ல மட்டும் அவர்கள் சட்டத்தில் இடம் இருக்கிறதோ? நமக்குப் புரியவில்லை. அமெரிக்கா நாயை ஏவுகிறது., இலங்கை வாலை ஆட்டிக் குலைக்கிறது. வாட்ச்மேன் இந்தியா என்ன செய்யும் ? அமெரிக்க எஜமானனின் வாசலில் நிற்கும் வாட்ச்மேன் இந்தியா எஜமானுக்கு சல்யூட் தானே வைக்கும். வேறென்ன செய்யும் ?
அம்மா, வழக்கம் போல கண்டனம் தெரிவித்திருக்கிறார். கடிதம் எழுதியிருக்கிறார். வழக்கம் போல மத்திய அரசு பீச்சாங்கையால் அதைத் தள்ளிவிட்டிருக்கிறது. இலங்கையை இந்தியா உட்பட யாரும் கேள்வி கேட்கவே போவதில்லை என்பது தான் நிதர்சனமாக நடக்கும் என்று தெரிகிறது.