சயீத் மிர்சா, குந்தன் ஷா, விரேந்திர சைனி, அஜய் ரெய்னா, ரஞ்சன் பாலித், மனோஜ் லோபோ,
தபன் போஸ், சஞ்சய் காக், மதுஸ்ரீ தத்தா, பிரதீப் கிரிஷென், ஸ்ரீபிரகாஷ், விவேக் சச்சிதானந்த், பி.எம்.சதீஷ், தருண் பாரிதியா, அமிதபா சக்ரவர்த்தி, ரபீக் இலியாஸ், சுதாகர் ரெட்டி யக்கான்ட்டி, அன்வர் ஜமால், சுதீர் பல்சானே, மனோஜ் நிதர்வால், ஐரீன் தார் மாலிக், சத்ய ராஜ் நாக்பால், அருந்ததி ராய் – இவங்கள்லாம் யாரு ?
இந்த 24 திரைத்துறைக் கலைஞர்களும் மோடியின் ஆட்சியில் நிலவி வரும் மதச்சகிப்புத் தன்மையற்ற தன்மையை எதிர்த்து தங்கள் தேசிய விருதுகளை திருப்பி அளிக்க முடிவெடுத்துள்ளவர்கள்.
பெருகி வரும் சகிப்புத் தன்மையற்ற போக்கு மற்றும் மத்திய அரசு மக்களின் எதிர்ப்புக் குரல்களுக்கு செவிசாய்க்காமல் புறக்கணிப்பது ஆகியவை இவர்கள் கூறும் முக்கியக் காரணங்கள்.
1988-ம் ஆண்டு சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்ற அருந்ததி ராய் தனது விருதை திருப்பியளிக்கிறார். மேலும் அஜய் ரெய்னா, ஒளிப்பதிவாளர்கள் ரஞ்சன் பாலித் மற்றும் மனோஜ் லோபோ, சமூக செயல்பாட்டாளரும் இயக்குநர்களுமான தபன் போஸ், சஞ்சய் காக், மதுஸ்ரீ தத்தா, பிரதீப் கிரிஷன் ஆகியோரும் பட்டியலில் உள்ளனர். இவர்களில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளை திரும்பி அளிக்கின்றனர்.
நம்ம கமல் ஸார் மும்பையில் போய் ராஜ் தாக்கரே ஸாரைப் பார்த்துட்டு வந்து, விருதையெல்லாம் திருப்பித் தரமாட்டேன். வேறு எவ்வளவோ வகையில் அரசின் கவனத்தை ஈர்க்கலாம்னு ஹைதராபாத்தில் பேட்டி கொடுத்து கவனத்தை ஈர்த்துட்டுப் போய்ட்டார். இவங்க பாவம். அப்படி எதுவும் கவனத்தை ஈர்க்கும் டெக்னிக்ஸ் எதுவும் தெரியாதவங்க போல. பொழைக்கத் தெரியாதவங்க. இப்படி விருதுகளை ரிட்டன் பண்றாங்க.