சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த “சைஸ் ஜீரோ” இசை வெளியீட்டு விழாவில் தெலுங்கு காமெடி நடிகர் அலி பேசும் போது அனுஷ்கா தொடை அழகை பற்றி கிண்டல் பண்ணி பேசினார். இதனால் பெரிய சர்ச்சை உண்டானது.
அதாவது அனுஷ்காவின் தொடைகள் தன்னை கவர்ந்ததாக ஆபாசமாக விமர்சனம் செய்தார். அவரது பேச்சு ஷாக் அளித்ததுடன் பலரை முகம் சுழிக்க வைத்தது. பொது இடத்தில் இப்படி ஆபாசமாக அலி பேசிய பேச்சுக்கு பெண்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் அனுஷ்காவுடன் ‘பாகுபலி’ படத்தில் இணைந்து நடித்துள்ள ராணா அனுஷ்கா பற்றி ஆபாசமாக அலியை அழைத்து எச்சரிக்கை விடுத்தார்.
‘மேடையில் எப்போதும் கவனமாக பேசுங்கள். நீங்கள் பேசும் ஆபாச கமென்ட் உங்களுடைய காமெடியன் இமேஜை கெடுத்துவிடும். அடுத்த முறை இதுபோல் துடுக்காக பேசாமல் எச்சரிக்கையாக இருங்கள்’ என மிரடியிருக்கிறார்.
ஆமாம்.. அவரை மிரட்டும் அளவுக்கு ராணா என்ன பெரிய அப்பாடக்கரா என்கிறீர்களா..? ஆமாம், சினிமாவிலும் அரசியலிலும் நீண்ட பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்ட குடும்பத்து பிள்ளை இந்த ராணா. அதனால் அவரின் மிரட்டலால் ஆடிப்போயிருக்கிறார் அலி.
ஆமா ராணா இப்படி பேசுனது த்ரிஷாவுக்கு தெரியுமா..?