நயன்தாராவின் முதல் காதல் அனுபவம் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது நடந்திருக்கிறது. ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கக்கூடிய பள்ளி. ஒருநாள் நயன்தாரா மேஜையில் ஒரு காதல் கடிதமும், ரோஜாப்பூவும் இருந்திருக்கிறது. அடுத்த நாளும் அதேபோல் ரோஜாவும், காதல்கடிதமும் நயன்தாராவின் மேஜையில் இருந்தது.
தினமும் இப்படி நடந்ததால் பயந்துபோய் வீட்டில் சொல்லிவிட்டாராம். பள்ளி முதல்வரிடமும் புகார் பறந்திருக்கிறது. ஏழாம் வகுப்பு படிக்கும் பையன் ஒருவன் தான் தினமும் காதல் கடிதமும், ரோஜாப்பூவும் வைத்து சென்றிருக்கிறான் என்று பின்னர் தெரிய வந்திருக்கிறது. அந்த முதல் காதல் அனுபவத்தை இன்று வரையிலும் என்னால் மறக்கவே முடியாது என்று பூரிக்கிறார் நயன்தாரா.
அப்போது ஆரம்பித்த காதல் சிம்பு, பிரபு தேவா என தொடர்ந்து விக்னேஷ் சிவனிடம் மையம் கொண்டிருக்கிறது. விக்னேஷ் சிவனுக்கு சமீபத்தில் ஒண்ணேமுக்கால் கோடி ரூபாயில் புதிய கார் ஒன்றையும் வாங்கித் தந்திருக்கிறார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் நயந்தாரா அவரைக் காதலிப்பதாக கூறப்படுகிறது. உண்மையில் விக்னேஷ் சிவன் மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். காவிரியை மையமாக்க் கொண்டு சரத் சூர்யா பச்சை மனிதன் என்றொரு படத்தை மாணவர்களிடம் பணம் வசூலித்து எடுக்க இருந்தாரே… அவர் தான் விக்னேஷ் சிவனை சினிமாவிற்கு அழைத்து வந்தவர்.