தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா படபடவென்று பேசுவது போலவே எதையாவது படபடவென்று ட்விட்டரிலும் தட்டிவிடுவார்.
சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி போன்ற ஒரு அழகியை போனிகபூர் கல்யாணம் செய்து கொண்டு போய் அவரது சினிமா வாழ்க்கையைக் கெடுத்து விட்டார் என்று ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டு ஸ்ரீதேவியின் குடும்பத்தில் ஒரு கலவரத்தை ஏற்படுத்தி விடப் பார்த்தார்.
தற்போது அவரிடம் சிக்கியவர் ரஜினி. சென்னையில் வெள்ளம் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பலரும் பலவிதமாக உதவிகள் செய்ய, சித்தார்த் போன்றோர் முழு மூச்சாக களத்தில் இறங்கி நின்று வேலை செய்து மக்களை அட என்று திரும்பிப் பார்க்க வைத்திருக்க, ரஜினிகாந்த் ஒரு பத்து லட்சம் வெள்ள நிவாரணத்திற்கு நிதி வழங்கி விட்டு சைலன்ட்டாகிவிட்டார்.
இதைக் கண்டித்த ராம்கோபால் வர்மா, ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் வாங்கும் சம்பளத்தோடு ஒப்பிடுகையீல் பத்து லட்சம் மிகக் குறைவு என்று தொனிக்க இதற்கு அவர் சும்மாவே இருந்திருக்கலாம் என்று ட்விட்டி விட்டார்.
பதிலுக்கு ரஜினி ரசிகர்கள் அவரைக் காய்ச்சி எடுத்து லாடம் கட்டுவார்கள் என்று பார்த்தால் பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை. அதே சமயம் அந்த ட்வீட்டுக்கு பலர் லைக்கும் போட்டிருக்கிறார்களாம். ரஜினி சார் யோசிக்க வேண்டிய விஷயம்.