பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்பு எல்லா துறைகளையும் இந்துத்துவா சிந்தனையுள்ளவர்களை உட்புகுத்தியது. அதனால் தணிக்கை முறையில் பல சர்ச்சைகளை சந்தித்துவந்த சென்சார் போர்டின் (தணிக்கைக் குழு) செயல்பாட்டை கண்காணிக்க, தற்போது இயக்குநர் ஷ்யாம் பெனகல் தலைமையில் ஒரு குழு ஜனவரி 1-ஆம் தேதி அமைக்கப்பட்டுள்ளது.
இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இடம்பெற வேண்டும் என கருதப்பட்டதால் கமல்ஹாசன், இயக்குநர்கள் ஷாஜி கருண், கவுதம் கோஷ் உள்ளிட்டோரும் இதில் இடம்பெறலாம் என ஷ்யாம் பெனகல் தெரிவித்துள்ளார்.
அதிக எண்ணிக்கையிலான படங்கள் தென்னிந்தியாவிலிருந்து வெளிவருவதால், கூடுதல் உறுப்பினர்களை சேர்க்கும் முடிவு எடுத்துள்ளார்களாம். கமல் சென்சார் போர்டில் இருக்கப் போவதால் இனி லிப் டு லிப் காட்சிகள் எல்லாம் யூ சர்ட்டிபிகேட்டில் சேர்க்கப்படவேண்டும் எந்று முத்தக் கமலின் ரசிக ரசிகைகள் சார்பாக சென்சார் போர்டுக்க வேண்டுகோள் விடுக்கிறோம்.