திரையுலகையே நாறடித்து முடித்த, டாப்ஸி மேட்டரில், அடித்த மனோஜுக்கும், அடிவாங்கிய மகத்துக்கும் இடையே டாப் லெவல் செட்டில்மெண்ட் நடந்து முடிந்தது. இதை ஒட்டி தனது புகாரை வாபஸ் வாங்கிய மகத், தனக்கு ஏற்பட்ட காயங்களைத்தடவியபடியே, மனோஜ் அனுப்பிய சமாதான தூதுவைவையும் ஏற்றுக்கொண்டார்.
ஞாயிறன்று அதிகாலை கண்ணிலும், அடிவயிற்றிலும் பலத்த அடியோடு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த மகத்,முதலில் போலீஸ் வரைக்கும் புகாரைக்கொண்டு செல்லவே விரும்பவில்லையாம்.
போலீஸுக்கு தகவல் தெரிவிக்காமல் சிகிச்சை அளிப்பது மருத்துவமனை நிர்வாகத்துக்கு சிக்கலை உண்டாக்கும் என்று சொல்லிக்கொண்டிருக்க, மனோஜ் தரப்போ விடாமல் மிரட்டிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். ‘
‘’எங்களுக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து போலீஸ் புகாரை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவோம்.ஆனால் அதற்கடுத்து உன் நிலையை யோசித்துப்பார்’ என்று மனோஜின் நண்பர்கள் விடாமல் மிரட்டிக்கொண்டிருக்க, வேறு வழியின்றி மனோஜ் மற்றும் அவரது மூன்று நண்பர்கள் மீது புகார் எழுதிக்கொடுத்தார் மகத்.
உடனே போலீஸாரும் மனோஜின் பேக் கிரவுண்ட் பற்றி அலட்டிக்கொள்ளாமல் இ.பி.கோ. செக்ஷன்கள் 324, 341, 294-பி, மற்றும் 596 பார்ட்-பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தேட ஆரம்பித்த வேளையில் நள்ளிரவோடு நள்ளிரவாக ஹைதராபாத்துக்கு தப்பி ஓடியிருந்தார் மனோஜ்.
விசயம் இவ்வளவு விபரீதம் ஆனது ஒருபுறமிருக்க, சண்டை நடக்கக்காரணமான டாப்ஸி மேட்டர் சினிமாவில் தனது இமேஜ் டவுசரைக்கிழித்துவிடும் என்று பயந்தே தனது தந்தை மோகன்பாபுவின் மூலம் உடனே சமாதான தூது அனுப்பினார் மனோஜ்.
இதை ஒட்டி மோகன்பாபுவுக்கு வேண்டப்பட்ட சிலர் மகத்தை மருத்துவமனையில் சந்தித்து, ‘வேணாம் மச்சான் வேணாம் இந்த டாப்ஸி காதலு. மீறி காதலிச்சா பறக்கும் பாட்டிலு’ என்று இதமாக எடுத்துச்சொல்ல, அதை ஆமோதிக்கும் விதமாக,’’எங்களுக்குள் இருந்த கருத்துவேறுபாடு தீர்ந்துவிட்டது. இனி என்றும் நாங்கள் நண்பர்களே’ என்று பேட்டியளித்துள்ளார் மகத்.
உங்களுக்குள்ள டீல் முடிஞ்சது ஓ.கே.? ஆனா 50/50 யா.அல்லது 60/40 யா எப்பிடி பிரிச்சிக்கிட்டீங்கங்கிற டாப்ஸ் ரகஸியத்தையும் கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லாருக்கும் மகத்.