ஸ்டைலிஷ் இயக்குனராக பிசாசு படத்தில் மீண்டும் கொஞ்சம் பெயர் எடுத்திருக்கிறார் மிஷ்கின். தனது திறமைக்கு சேலஞ்ச் என்று நினைக்கும் படங்களை முயற்சி செய்வதை விடுத்து மீண்டும் ஒரு த்ரில்லர் பக்கம் தாவியிருக்கிறார் இப்போது. மிஷ்கின் இயக்கும் அந்த புதிய படத்திற்கு ‘துப்பறிவாளன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கத்தில் வரும் ‘மருது’ திரைப்படத்தில் விஷால் நடித்து வருகிறார். இப்படம் முடிந்ததும் மிஷ்கினின் துப்பறிவாளனாக அவர் நடிப்பார் என்று தெரிகிறது. துப்பறிவாளன் ஒரு சஸ்பென்ஸ், திரில்லர், ஆக்ஷன் படம். விஷால் தனது சொந்த பேனரிலேயே இப்படத்தைத் தயாரிக்கிறார்.
ராமின் இயக்கத்தில் ‘சவரக்கத்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் மிஷ்கின் அது முடிவடைந்ததும் தனது சவரக்கத்தியை எடுப்பார் எனத் தெரிகிறது.