’என்றென்றும் புன்னகை’யாக ஆரம்பிக்கப்பட்ட ஜீவா- த்ரிஷாவின் படம் படப்பிடிப்பு துவங்கிய நான்கே நாட்களில் பெரும்போர்க்களமாக மாறி படம் தொடருமா என்ற கேள்விக்குறிக்குள்ளாகியிருக்கிறது.
தமிழில் படமே இல்லாமல் போராடி இப்போது ஒரே நேரத்தில் விஷாலுடன் சமர், ஜெயம் ரவியுடன் பூலோகம்,ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை ஆகிய படங்களில் நடிக்கிறார். இவற்றில் சமர் முக்கால்வாசி முடிந்து விட்டது. பூலோகம் பாதிக்குமேல் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. என்றென்றும் புன்னகை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. ஜூன் 29 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. நான்கு நாட்கள் படப்பிடிப்போடு முதல் கட்டம் நிறைவடைந்திருக்கிறது. அடுத்து ஆகஸ்ட் மாதத்தில் ஜீவாவும் வந்தபிறகு படப்பிடிப்பு நடக்கும். அதுவும் வெளிநாட்டில்.
ஆனால் த்ரிஷாவோ, மேற்கொண்டு இந்தப்படத்தில் நடிக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக்கொண்டிருக்கிறாராம்.அதற்குக் காரணம் இருக்கிறது.இப்படத்தின் முதல் நான்கு நாட்கள் படப்பிடிப்பின் போது,த்ரிஷாவின் உதவியாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய பேட்டாவை த்யாரிப்பாளர் தரப்பு கொடுக்கவில்லையாம்.
தயாரிப்பாளர் சினிமாவுக்கு புதுசு என்பதால், த்ரிஷாவின் உதவியாளர்கள் பேட்டா தொகையை அநியாயத்துக்கு உயர்த்தி எழுதிக்கொடுக்க அப்படியே மொத்த்தொகையையும் தராமல் தயாரிப்பாளர் தரப்பில் பெண்டிங் வைத்துவிட்டார்களாம்.
இந்த விசயத்தை த்ரிஷாவின் கவனத்துக்கு அவருடைய உதவியாளர்கள் கொண்டு சென்றதால் அவர் கடுப்பாகி விட்டாராம்.பெரிய தயாரிப்பாளர்,பெரிய ப்ராஜெக்ட் என்று நினைத்துத்தான் இந்தப்படத்தில் நடிக்கவே ஒப்புக்கொண்டேன்.ஆனால் இந்த மாதிரி சில்லித்தனமாக நடந்து கொள்கிறார்களே என்று நொந்து கொண்டாராம்.இதனால் அடுத்தகட்டப் படப்பிடிப்புக்குத் தேதி கேட்கும்போது பார்த்துக்கொள்கிறேன் என்று தன்னுடைய உதவியாளர்களிடம் சொல்லியிருக்கிறாராம்.
ஏற்கனவே ஜீவாவால் மூன்று வருடம் பெண்டிங்கில் கிடந்த இந்தப்படம் த்ரிஷாவால் என்னவாகப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.