ஆக்சுவலாய் இந்த செய்தி எத்தனையாவதோ முறையாய் நடந்தது என்பதால் எழுதவேண்டிய அவசியமற்றது. ஆனாலும் தேர்தல் நெருங்குகிறது. அதுவரை கள்ளத்தனமாய் ஒரு பவ்யம் காட்டலாம் என்கிற பயம் கூட இல்லாமல் செய்தி சேகரிக்க வந்த நிருபர் கூட்டத்தை நாயை விரட்டுவது விரட்டி அடித்தனர் கேப்டன் நலக்கூட்டணியினர்.
வைகோ உள்ளிட்ட மக்கள் நலக்கூட்டணியினர் இன்று மதியம் கேப்டன் விசயகாந்தை சந்திக்க அவரது கோயம்பேடு அலுவலகம் வருவதாய் இருந்த நிலையில் பத்திரிகை நிருபர்கள் அங்கு குவிய ஆரம்பித்தனர். இத்தகவல் கேப்டன் காதுகளுக்கு கொண்டுபோகப்பட வெளிய சொன்னா வெட்கக்கேடு என்கிற அளவுகளுக்கு வசவுகளை உதிர்த்த கேப்டன் ‘அவனுகளை அடிச்சிப்பத்திவிடு’ என்பதாக முடித்தார்.
இதைத்தொடர்ந்து கேட்டுக்கு வந்த கே.ந.கூ.வினர் நிருபர்களை ஒருமையில் விளித்து ‘உங்களை உள்ளவிட்டாலும் எங்களைப்பத்தி தப்புத்தப்பாதான் எழுதப்போறீங்க. அதனால ஒழுங்கு மரியாதையா கிளம்பி ஓடுங்கடா’ என்றே விரட்டி அடித்தனர்.
இந்த சம்பவத்தை கேள்விப்படும்போது ‘கேணப்பயலுக ஊர்ல கிறுக்குப் பயலுக நாட்டாமை’ என்ற பழமொழி நினைவுக்கு வந்துபோவதை தடுக்கமுடியவில்லை.
நம்ம நிருபர்கள் எதிர்ப்புத்தெரிவிப்பது இருக்கட்டும்.குறைந்தது ஒரு 24 மணி நேரத்துக்கு ரோஷத்தோடு இருந்து அவர்களைப் புறக்கணிப்போமே என்று நினைக்கமாட்டார்கள்.
நாளை காலை முதல்வேலையாக கேப்டன் கட்சி அலுவலகத்துக்கு முன்பு தேவுடு காப்பார்கள்.